அனுராதபுரம் மாவட்ட தொழிலாளர் காரியாலயத்தில் பணிபுரிந்த அதிகாரியொருவருக்கு 10 ஆண்டு சிறை மற்றும் 35 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று (13) பிறப்பித்துள்ளார்.

கடந்த 2009 ஆண்டு வெதுப்பக உரிமையாளர் ஒருவரிடமிருந்து 25 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுக்காகவே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.