சாரதியின் அவசரத்தால் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, குறித்த பஸ்ஸின் வழித்தட அனுமதி வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இரத்து செய்யப்பட்டள்ளது.
யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் கடந்த திங்கட்கிழமை பஸ்ஸிலிருந்து பெண்ணொருவர் இறங்க முற்பட்டபோது சாரதி அவசரமாக பஸ்ஸை நகர்த்திமையால், அப்பெண் விழுந்து படுகாயமடைந்தார்.
பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் சாரதியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற உத்தரவில் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினர் விசாரணைகளை முன்னெடுத்து, பஸ்ஸின் வழித்தட அனுமதியினை இரத்து செய்துள்ளனர்.
பஸ்கள் போட்டி போட்டு ஓடுவதனாலேயே அதிகளவான விபத்துகள் இடம்பெற்று வருவதாகவும், அவ்வாறு அதிக வேகமாக பஸ்களை செலுத்தும் சாரதிகள் தொடர்பில், யாழ்.மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினருக்கு முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM