வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேர் கைது ; முல்லைத்தீவில் சம்பவம்

23 Feb, 2024 | 12:39 PM
image

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து வாகனங்களும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றைய தினம் (22) வியாழக்கிழமை இரவு 6.50 மணியளவில் புதுமாத்தளன்  பகுதியிலுள்ள வீட்டுகாணி ஒன்றில் 4 பேரடங்கிய குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸ் குழுவினர் புதையல் தோண்டிய 4 பேரையும் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து வைகோ இயந்திரம், டிப்பர் ரக வாகனம்,  என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது புதுமாத்தளன் பகுதியை சேர்ந்த இருவரும், ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த ஒருவரும், கைவேலி பகுதியை சேர்ந்த ஒருவருமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 45,42,31 மற்றும் 30 வயதுடையவர்களாவர்.

சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை (23) முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10