தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மணல் அகழ்விற்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய மக்கள்

23 Feb, 2024 | 12:36 PM
image

தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் நேற்று வியாழக்கிழமை  (22) மாலை மணல் அகழ்வு பணியில் ஈடுபட வந்த நிலையில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தலைமன்னார் இறங்கு துறை, தலைமன்னார் ஊர் மனை,தலைமன்னார் ஸ்டேஷன் பகுதி மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தலைமன்னார் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.

எவ்வித அனுமதியும் இன்றி மக்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படாமல் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக சகல ஆயத்தங்களுடனும் குறித்த குழுவினர் வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 அப்பகுதிக்கு வருகை தந்த  மணல் பரிசோதனை குழுவினர் தாங்கள் ஒரு ஒப்பந்த நிறுவனம் என்றும் தமது   ஒப்பந்தத்தினை காண்பித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மக்களின் எதிர்ப்பை   தொடர்ந்து குறித்த குழுவினர் அங்கிருந்து வெளியேறியுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வந்த  தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41