றோயல் - தோமாவின் கிரிக்கெட் சமருக்கு உப அனுசரணையாளர்கள்

23 Feb, 2024 | 10:05 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் மார்ச் மாதம் 7, 8, 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள றோயல் கல்லூரிக்கும் பரி. தோமாவின் கல்லூரிக்கும் இடையிலான 145ஆவது நீலவர்ணங்களின் கிரிக்கெட் சமருக்கு டயலொக் ஆசிஆட்டா பிரதான அனுசரணை வழங்குகிறது.

அதேவேளை இன்னும் பல நிறுவனங்கள் உப அனுசரணையாளர்களாக இணைந்துள்ளன. இந்த அனுசரணைகளை பரி. தோமாவின் கல்லூரி முதல்வர் வண. மார்க் பிலிமோரியா, றோயல் கல்லூரி அதிபர் திலக் வத்துஹேவா ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டனர்.

ப்ளட்டினம் அனுசரணையை டய்யான் லங்கா ஸ்டீல் கம்பனியும் பிரத்தியேக ஆடை அனுசரணையை மாஸ் நிறுவனமும் சுவையான உணவு அனுசரணையை பெரேரா அண்ட் சன்ஸ் நிறுவனமும் நீராகார அனுசரணையை  யெட்டி நிறுவனமும் வழங்கின.

இந்த நிறுவனங்களைவிட உத்தியோகபூர்வ உணவு மற்றும் பானங்கள் பங்காளியாக எலிஃபன்ட் ஹவுஸ் நிறுவனமும் உத்தியோகபூர்வ வர்ண பூச்சு பங்காளியாக நிப்பொன் பெய்ன்ட் நிறுவனமும் உத்தியோகபூர்வ சொக்கலட் பங்காளியாக ரிவெல்லோ - சிபிஎல் நிறுவனமும் உத்தியோகபூர்வ மொபிலிட்டி பங்காளியாக பிக்மி நிறுவனமும், ஹொட் சொக்கலட் பங்காளியாக அங்கர் நிறுவனமும், உத்தியோகபூர்வ ஆன்லைன் க்ரொசரி பங்காளியாக செலெஸ்டே டெய்லி நிறுவனமும், உத்தியோகபூர் ஃபேர்னிச்சர் அண்ட் இன்டீரியர் டிசைன் பங்காளியாக ஃபைனெஸ் நிறுவனமும் பிரத்தியேக ரியல் எஸ்டேட் பங்காளியாக ரியல்டோ லங்கா ப்ரொப்பட்டீஸ் பிறைவேட் லிமிட்டட் நிறுவனமும் உத்தியோகபூர்வ சிற்றுண்டி பங்காளியாக சிபிஎல் மஞ்சி நிறுவனமும் ஃபுல்லர் பேர்கர்ஸ் அனுசரணை பங்காளியாக ஐ ஜீ ஏ நிறுவனமும் உத்தியோகபூர்வ டேட்டா பங்காளியாக எஸ் ஏ ரீ நிறுவனமும் உத்தியோகபூர்வ சமூக ஊடக பங்காளியாக டி சி குறூப் நிறுவனமும் இணைந்துள்ளன.

இது இவ்வாறிருக்க, பரி. தோமாவின் கல்லூரி கிரிக்கெட் அணிக்கான அனுசரணையை 7ஆவது வருடமாக ப்ரோ மேட் நிறுவனமும்  றோயல் கல்லூரி கிரிக்கெட் அணிக்கான அனுசரணையை க்ரெலீசா இமோலா நிறுவனமும் வழங்கின.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22