ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ பிரதி இராஜாங்கச் செயலாளர்

Published By: Digital Desk 3

23 Feb, 2024 | 03:10 PM
image

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்கும் (Richard Verma) ரிச்சர்ட் வர்மாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழழை (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தலைமையிலான அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பிரதி இராஜாங்க செயலாளர் இதனபோது பாராட்டுத் தெரிவித்தார். 

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் உட்பட இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளருக்கு விளக்கமளித்தார்.

உலக பாதுகாப்பு தொடர்பான விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், செங்கடலில் இடம்பெறும் கடற்படை நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு பிரதி இராஜாங்க  செயலாளர் நன்றி தெரிவித்தார்.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்பில் சவூதி அரேபியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி, இந்து சமுத்திரத்தின் சுதந்திரமான கடற்பயணத்திற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிக்கும் எனவும் உறுதியளித்தார். 

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பதில் செயலாளர் யூ.எல்.எம். ஜோஹர், சர்வதேச உறவுகள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அமெரிக்க பிரிவின் பணிப்பாளர் சதுர் பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்...

2025-01-14 19:21:46
news-image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று...

2025-01-15 01:36:26
news-image

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு...

2025-01-14 19:58:50
news-image

இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக...

2025-01-14 19:39:54
news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13