பணக்காரனாகும் பிச்சைக்காரன்

Published By: Robert

07 Jan, 2016 | 03:39 PM
image

நான், சலீம்,இந்தியா பாகிஸ்தான் ஆகிய படங்களின் மூலம் தன்னை ஒரு நடிகனாக நிலை நிறுத்திக் கொண்டவர் இசையமைப்பாளரான விஜய் அண்டனி. இவர் தற்போது மாஸ் ஹீரோ ஆகவேண்டும் என்ற நம்பிக்கையில் நடித்த படம் தான் பிச்சைக்காரன். இவரின் நம்பிக்கை வெல்லுமா? என்பது குறித்து பிரபல இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இப்படத்தின் ஓடியோவை வெளியிட்டு பேசிய போது, 

இப்படத்தின் இயக்குநர் சசி என்னுடைய இனிய நண்பர். ஒரு நாள் நண்பர்கள் சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் போது, 

சசியிடம் என்ன படம் செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டேன். அவர் விஜய் அண்டனியை வைத்து படம் இயக்கிக் கொண்டிருக்கிறேன் என்றார். படத்தின் டைட்டிலைக் கேட்டேன். சொல்லவில்லை. அதன் பிறகு உதவியாளர் ஒருவர் என் காதில் பிச்சைக்காரன் என்று சொன்னார். உடனே அவரிடம் தயவு செய்து படத்தின் டைட்டிலை மாற்றிவிடுங்கள் என்று நானும் காதில் கிசுகிசுத்தேன். இயக்குநர் சசியும் சரியென்று தலையாட்டினார். பின்னர் நாளிதழில் வெளிவந்த விளம்பரத்தில் பிச்சைக்காரன் என்று தானிருந்தது. 

நான் சசியிடம் போன் செய்து கேட்டபோது, ஹீரோவுக்கு இது பிடிச்சிருக்கு. கதைக்கு ஏற்ற டைட்டில் இது தான் என்று சொல்லிவிட்டார் என்று என்னிடம் சொன்னார். இப்போது படத்தின் முன்னோட்டத்தையும், பாடல் காட்சிகளையும் பார்த்தபிறகு சொல்கிறேன். ஹீரோ விஜய் அண்டனியின் நம்பிக்கை தான் வென்றது. இந்த படத்திற்கு பிச்சைக்காரன் தான் சரியான டைட்டில். 

இந்த பிச்சைக்காரன் வெளியாகி அனைவரையும்  பணக்காரனாக்கும். இதற்கு என்னுடைய மனபூர்வமான வாழ்த்துக்கள்’ என்றார். 

அத்துடன் இயக்குநர் சசி, நான் தனியாக படம் இயக்கவேண்டும் என்று எண்ணி முயற்சி செய்து கொண்டிருந்த போது எனக்கு ஆதரவளித்தார். கிட்டத்தட்ட இந்த படத்தின் டைட்டில் போல் அன்று நானிருந்தேன். எனக்கு நம்பிக்கையூட்டியவர் சசி. அதன் காரணமாகவே அவரின் இந்த பிச்சைக்காரன் அனைவரையும் கோடீஸ்வரனாக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்’ என்றார். 

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right