அமெரிக்காவின் தனியார் நிறுவனம் ஒன்று அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியுள்ளது. தனியார் நிறுவனத்தின் விண்கலம் நிலவில் தரையிறங்குவது இதுவே முதல்முறையாகும்.
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்காவுக்கு சொந்தமான விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது.
டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகரிலுள்ள தனியார் நிறுவனம் அனுப்பிய ஒடிஸியஸ் விண்கலம் (Odysseus lander) தான் இப்போது நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கியுள்ளது.
நாசாவின் நிதியுதவியுடன் அனுப்பப்பட்டுள்ள இந்த விண்கலத்தில் நிலவு குறித்து ஆய்வு செய்யப் பல வகை ரோபோக்கள் உள்ளன. முதற்கட்டமாக நிலவில் தரையிறங்கிய அந்த விண்கலத்தில் இருந்து லேசான சிக்னல் கிடைப்பதாக நாசா ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும், ஒடிஸியஸ் விண்கலம் தற்போது முழுமையாகச் செயல்படும் நிலையில் இருக்கிறதா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அறுகோண வடிவில் அமைந்துள்ள இந்த விண்கலம் நிலவின் அருகே சென்றதும் தனது வேகத்தைப் பல மடங்கு குறைத்துள்ளது.
பிறகு ஒரு மணி நேரத்திற்கு மிக மெதுவாகச் சென்ற அந்த விண்கலம் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே தரையிறங்கியது. இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இந்த விண்கலம் தரையிறங்கி உள்ளது.
அந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM