கொலை முயற்சிக்கு உதவிய இருவர் கைது!

Published By: Digital Desk 3

23 Feb, 2024 | 10:22 AM
image

கொழும்பு, முகத்துவாரம்  பகுதியில் நபரொருவரை  கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இம்மாதம் 16 ஆம் திகதி  மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அதன்படி, இந்தச் சம்பவத்துக்கு  உதவியதாக 16 மற்றும் 21 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள்  கொழும்பு 15,  பெர்குசன் வீதியிலும்  சேதவத்தை பிரதேசத்திலும் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு   அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரும் கொழும்பு 15 இல் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த கொலை முயற்சி தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:24:58
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53
news-image

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை...

2025-01-20 16:47:30
news-image

06 கோடியே 63 இலட்சம் ரூபா...

2025-01-20 15:55:37
news-image

அம்பாறையில் சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான்கதவுகள்...

2025-01-20 15:50:47
news-image

ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக...

2025-01-20 15:44:31
news-image

கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் வெடிப்புச்...

2025-01-20 15:22:49
news-image

யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை...

2025-01-20 15:23:27
news-image

பெண்கள் பொதுத் துறைகளில் ஈடுபடுவதும் ஆண்கள்...

2025-01-20 15:47:33
news-image

கலாசார மையத்தின் பெயர் மாற்றம் குறித்து...

2025-01-20 15:01:23