இன்றைய வானிலை !

23 Feb, 2024 | 06:40 AM
image

வடமேல் மாகாணத்திலும் அத்துடன் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டத்திலும் இன்று வெப்பம் அதிகரித்துக் காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன்கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

வடமேல் மாகாணத்திலும் அத்துடன் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டத்திலும் இன்று வெப்பம் அதிகரித்துக் காணப்படும். இதனை வெப்பச் சுட்டெண் என்று அழைக்கப்படும். ஆனால் அதிகரித்த வெப்ப நிலையாக கொள்ளமுடியாது.

அதாவது மனித உடலினால் உணரப்படுகின்ற இந்த வெப்ப நிலையானது ஈரப்பதனுக்கும் அதிகூடிய வெப்ப நிலைக்கும் இடையிலான தொடர்பாகும்.

இவ்வாறான வெப்பம் அதிகரித்துக் காணப்படுகின்றபோது, வெளியிடங்களில் வேலைசெய்யும் மக்கள் நிழல் சார்ந்த இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் நோயாளிகளை அடிக்கடி கவனத்தில் கொள்ள வேண்டும். திறந்த வாகனங்களில் பிள்ளைகளை வெளியில் கூட்டிச்செல்ல வேண்டாம். அடிக்கடி நீராகாரம் பருக வேண்டும். 

வெளிர் நிறத்திலான ஆடைகள் அணிதல் பொருத்தமானதாகும். 

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய சப்ரகமுவ மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடற்பிராந்தியங்களை பொறுத்தவரையில் புத்தளம் தொடக்கம் கொழும்பு காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 முதல் 25 கிலோமீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41