ஸ்பெயினில் வலென்சியா நகரில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய தீவிபத்து – பெருமளவு பொதுமக்கள் வீடுகளிற்குள் சிக்குண்டுள்ளதால் அச்சம்

Published By: Rajeeban

23 Feb, 2024 | 05:53 AM
image

ஸ்பெயினின் வலென்சியா நகரில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பெருமளவு மக்கள் தங்கள் வீடுகளிற்குள் சிக்குண்டிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.

கம்பனார் என்ற பகுதியில் உள்ள 14 அடுக்குகளை கொண்ட தொடர்மாடிக்கட்டிடமொன்றில் பரவிய தீ அருகில் உள்ள கட்டிடங்களிற்கும் பரவியுள்ளது.

பலர் வீடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர் பல்கனிகளில் உள்ள மக்களை தீயணைப்பு படையினர் மீட்டுவருகின்றனர்

இதுவரை தீயணைப்பு படைவீரர்கள் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த கட்டிடத்தில் 138 வீடுகள் உள்ளதாகவும் 450க்கும் அதிகமானவர்கள் வசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீயணைப்பு படையினர் ஏழாம்மாடியில் வசிக்கும் தம்பதியினர் உட்பட பலரை மீட்டுள்ளனர் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

முதலாம்மாடியில் சிக்குண்டுள்ள பதின்மவயது இளைஞனை மீட்பதற்கான நடவடிக்கைகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

நாலாம்மாடியிலேயே முதலில் தீ மூண்டது பின்னர் தீ மிகவேகமாக பரவத்தொடங்கியது என தொடர்மாடிக்குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.பத்து நிமிடங்களில் முழுமையாக பரவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34