(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றத்தினால் 2024 பெப்ரவரி 09 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் குழுக்களில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் வியாழக்கிழமை (22) சபையில் சமர்ப்பித்தார்.
இதற்கமைய ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, பொது மனுக்கள் பற்றிய குழு,பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, முதலீட்டு மேம்பாடு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, கமத்தொழில் அலுவல்கள் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஆகியவற்றுக்கும்
வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, கைத்தொழில் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஆகியவற்றுக்கும்
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் அரச பெருந்தோட்டக் தொழில்முயற்சி மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஆகியவற்றுக்கும் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM