(நெவில் அன்தனி)
இந்த வருடம் நடைபெறவுள்ள றோயல் கல்லூரிக்கும் பரி. தோமாவின் கல்லூரிக்கும் இடையிலான நீல வர்ணங்களின் சமருக்கு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அனுசரணை வழங்குகிறது.
இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தொடர்ச்சியாக 19ஆவது வருடமாக இப் போட்டிக்கு அனுசரணை வழங்குகின்றமை விசேட அம்சமாகும்.
நீலவர்ணங்களின் சமர் என அழைக்கப்படும் றோயல் - தோமியன் 145ஆவது வருடாந்த கிரிக்கெட் போட்டிக்கான பிரதான அனுசரணை உதவுத் தொகைக்கான மாதிரி காசோலையை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தேவப்பெருமவிடமிருந்து பரி. தோமாவின் கல்லூரி முதல்வர் வண. மார்க் பிலிமோரியா, றோயல் கல்லூரி அதிபர் திலக் வத்துஹேவா ஆகியோர் பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட படம். றோயல் - தோமியன் போட்டி ஏற்பாட்டுக்குழு இணைத் தலைவர்களான ரெஹான் குணசேகர (றோயல் கல்லூரி), அர்ஜுன வைத்யசேகர (பரி. தோமாவின் கல்லூரி) ஆகியோரையும் படத்தில் காணலாம்.
கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை பரி. தோமாவின் கல்லூரிக்கும் இடையிலான 145ஆவது நீல வர்ணங்களின் சமர் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் மார்ச் 7, 8, 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இப் போட்டி டி. எஸ் சேனாநாயக்க ஞாபகார்த்த கேடயத்திற்காக நடத்தப்படுகிறது.
இதேவேளை, இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான மஸ்டாங்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் மார்ச் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.
றோயல் கல்லூரிக்கும் பரி. தோமாவின் கல்லூரிக்கும் இடையிலான 145வது வருடாந்த கிரிக்கெட் போட்டி Dialog Television - ThePapare TV HD (அலைவரிசை இலக்கம் ThePapare.com மற்றும் Dialog ViU App ஆகியவற்றிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.
இந்த வருடம் நீலவர்ணங்களின் கிரிக்கெட் சமரில் றோயல் அணிக்கு சினேத் ஜயவர்தன தலைவராக விளையாடுகிறார். இவர் தென் ஆபிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் இளம் அணிக்கு தலைவராக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பரி. தோமாவின் அணிக்கு மஹித் பெரேரா தலைவராக விளையாடுகிறார்.
144 ஆண்டுகால பழைமைவாய்ந்த றோயல்-தோமியன் கிரிக்கெட் போட்டியானது முழு உலகிலும் இடையறாது நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது இடத்தை பெறுகிறது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் புனித பீட்டர்ஸ் கல்லூரி மற்றும் அடிலெய்ட் பிரின்ஸ் அல்ஃப்ரட் கல்லூரிக்கும் இடையிலான போட்டி றோயல் - தோமியன் போட்டி ஆரம்பமாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பமானதாகும்.
இரண்டு உலக மகா யுத்தங்களின்போதும் சரி, உலகில் அவ்வப்போது தாக்கத்தை ஏற்படுத்திய உயிர்க்கொல்லி நோய்களின்போதும் சரி றோயல் - தோமியன் போட்டி தங்குதடையின்றி நடைபெற்று வந்துள்ளது.
இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் போட்டி தற்போது தாஜ் சமுத்ரா ஹொட்டேல் அமைந்துள்ள இடத்தில் 1880இல் நடைபெற்றது.
இப் போட்டி ஆஷஸ் கிரிக்கெட் தொடரைவிட பழைமைவாய்ந்ததாகும்.
கடந்த வருடம்வரை நடந்து முடிந்த 144 போட்டிகளில் 36 - 35 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் றோயல் முன்னிலையில் இருக்கிறது.
பல அரசியல் தலைவர்களையும் தேசிய கிரிக்கெட் வீரர்களையும் உருவாக்கிய பெருமை இந்த இரண்டு கல்லூரிகளையும் சாருகிறது.
இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க, இரண்டாவது பிரதமர் டட்லி சேனாநாயக்க ஆகியோர் பரி. தோமாவின் பழைய மாணவர்களாவர். முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல, இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன றோயல் கல்லூரியின் பழைய மாணவர்களாவர். அவர்கள் மூவரும் கல்லூரி அணிகளில் இடம்பெற்றவர்களாவர்.
இது இவ்வாறிருக்க, இலங்கையில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவித்து அவற்றின் கிரிக்கெட் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனமும் றோயல் மற்றும் பரி. தோமாவின் கல்லூரிகளும் காருண்ய உதவுத் திட்டத்தை வருடாந்தம் செயற்படுத்தி வருகினறன.
போட்டியில் பெறப்படும் ஒவ்வொரு ஓட்டத்திற்கும் 1000 ரூபா வீதமும் வீழ்த்தப்படும் ஒவ்வொரு விக்கெட்டிற்கும் 10,000 ரூபா வீதமும் நிதி ஒதுக்கப்பட்டு காருண்ய உதவுத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
கடந்த வருட போட்டியின்போது ஒதுக்கப்பட்ட 1,128,000 ரூபாவைக் கொண்டு றோயல் கல்லூரியினதும் பரி. தோமாவின் கல்லூரியினதும் ஆலோசனைக்கு அமைய பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணத் தொகுதி அன்பளிப்பு செய்யப்பட்டது.
றோயல் - தோமியன் மாபெரும் கிரிக்கெட் தொடர்பாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (21) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் முடிவில் கிரிக்கெட் உபகரண தொகுதிகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM