மத்தறையிலிருந்து சிவனொளிபாத மலைக்கு சென்ற பேருந்து விபத்து!

Published By: Vishnu

22 Feb, 2024 | 09:51 PM
image

மத்தறையிலிருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகர்கள் குழுவை ஏற்றி சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது.

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று வியாழக்கிழமை (22)  இரவு வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் காயமடைந்த 08 பேர் நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சாரதியின் அதிக வேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என நானுஓயா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பேருந்து பயணித்த போது அதில் 40 பேர் இருந்ததாகவும் இதில் குழந்தைகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் இவர்கள் தற்போது பாதுகாப்பாக நானுஓயா சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19