நுவரெலியா மாநகரில் அதிகமாக காணப்படும் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுவரெலியா நகரில் பேருந்து தரிப்பு நிலையம், நுவரெலியா மத்திய சந்தை மற்றும் சன நெருக்கடியான குறுக்கு வீதிகள் என பல இடங்களில் கட்டாக்காலி நாய்கள் கூட்டம் கூட்டமாக பொது மக்களுக்கு அச்சத்தையும், போக்குவரத்து இடையூறையும் ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிகின்றன.
மேலும், பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளின் அருகில் சென்று இந்த கட்டாக்காலி நாய்கள் சிறுநீர் கழிப்பது, மக்கள் பயணிக்கும் வீதிகளில் மலம் கழிப்பது நகரின் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, நுவரெலியா மற்றும் கந்தப்பளை நகரங்களில் ஆங்காங்கே கட்டுப்பாடுகளின்றி நாய்கள் குட்டிகளை ஈன்று, அதன் இனப் பெருக்கத்தை அதிகரித்து வருகின்றன. இது தொடர்பில் நுவரெலியா பொது சுகாதார பரிசோதக காரியாலயம் மற்றும் நுவரெலியா மாநகர சபை பொது சுகாதார பிரிவு பரிசோதகர்களும் அவதானித்துள்ளனர்.
இந்நிலையில், நாய்கள் இனப்பெருக்கம் செய்வதை கட்டுப்படுத்த, அவற்றுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைத்து கட்டாக்காலி நாய்களுக்கும் நீர் வெறுப்பு ஊசிகள் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெளிநாட்டிலிருந்து நுவரெலியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கட்டாக்காலி நாய்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுவரெலியாவில் கட்டாக்காலி நாய்களால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் தொடர்பாக நுவரெலியா மாநகர சபையில் இயங்கும் பொது சுகாதார பரிசோதக அதிகாரிகள், மாநகர சபை ஆணையாளர் மற்றும் மாவட்ட செயலாளரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
எனவே, நுவரெலியா வசந்த கால நிகழ்வு ஆரம்பிக்கும் முன்னர், நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், திணைக்களங்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM