சிலிகோசிஸ் எனும் நாட்பட்ட நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

22 Feb, 2024 | 05:04 PM
image

சுரங்கம் மற்றும் கல் குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், தோட்டக்கலை, மண்பாண்டம், கல்வெட்டு, கல் சிற்பம் செதுக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சிலிகோசிஸ் எனும் நாட்பட்ட நுரையீரல் பாதிப்பு ஏற்படக்கூடும். இதற்குரிய முறையான விழிப்புணர்வும், முழுமையான நிவாரண சிகிச்சையும் பெற்றால்.. இத்தகைய பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதுடன், விடுபடலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய சுற்றுப்புறத்தில் உள்ள கல், மண், மணல், களிமண், பாறை ஆகியவற்றில் சிலிக்கா எனும் பொருள் காணப்படுகிறது. இத்தகைய பொருட்கள் தூசியாக பறந்து எம்முடைய சுவாசத்தின் வழியாக நுரையீரலுக்குச் சென்று, அங்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இவை நுரையீரலுக்குள் நுழைந்தவுடன் வீக்க பாதிப்பை ஏற்படுத்தி, நாளடைவில் நுரையீரல் திசுக்களை சேதப்படுத்தி நுரையீரல் சுருக்க பாதிப்பை உண்டாக்குகிறது. இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

இருமல், மூச்சுத் திணறல், சோர்வு ஆகியவை தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு மேல் நீடித்தால்... உங்களது நுரையீரல் இயல்பான செயல் திறனில் இயங்காமல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதனை உணர்ந்து, அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவரை சந்தித்து ஆலோசனையும்,  சிகிச்சையும் பெற வேண்டும்.

சிலருக்கு இயல்பான வேகத்தை விட சற்று கூடுதலாக நடைபயிற்சி மேற்கொள்ளும் போது நெஞ்சடைப்பு, சுவாசித்தலில் அசௌகரியம், அதீத சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து அவர் மேற்கொள்ள பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதனை கவனியாது புறக்கணித்தால்.. காச நோய், இதய செயலிழப்பு, மூட்டு வலி, சிறுநீரக கோளாறு, நாள்பட்ட நுரையீரல் தொற்று, நுரையீரல் புற்றுநோய் போன்ற பாதிப்பை உண்டாக்கி... உயிருக்கு பாரிய விளைவை ஏற்படுத்தும்.

இதன்போது எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், நுரையீரல் இயங்கு திறனை பரிசோதிக்கும் பிரத்யேக பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர்.

இதனைத் தொடர்ந்து பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி முதன்மையான நிவாரணத்தை வழங்குவர்.

மேலும் வயது, உடல் நிலை ஆகியவற்றை பொறுத்து இரண்டு பிரத்யேக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறும் மருத்துவர்கள் பரிந்துரைப்பர். உங்களுடைய பாதிப்பிற்கு ஏற்ப ஒக்சிஜன் தெரபி என்ற சிகிச்சை மூலமும் நிவாரணத்தை வழங்குவர்.

வெகு சிலருக்கு மட்டுமே நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதே தருணத்தில் நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் அதனை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.

டொக்டர் ராமசந்திரன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15
news-image

ஹைபர்லிபிடெமியா எனும் அதீத கொழுப்புகளை அகற்றுவதற்கான...

2025-01-05 17:50:36