அருண் பாண்டியன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் 'அதோமுகம்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

22 Feb, 2024 | 05:04 PM
image

புதுமுக நடிகர் எஸ். பி. சித்தார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'அதோமுகம்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.‌

இயக்குநர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அதோமுகம்' படத்தில் எஸ்.பி. சித்தார்த், சைதன்யா பிரதாப், சரித்திரன், ஜே. எஸ். கவி, ஆனந்த் நாக், பர்வேஸ் முஷாரப், அக்ஷதா அஜித் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தயாரிப்பாளரும், நடிகருமான அருண்பாண்டியன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 

அருண் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணிகண்டன் முரளி மற்றும் சரண் ராகவன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத்தை பின்னணியாக கொண்டு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் பெட்டி எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் கதையின் நாயகனான எஸ். பி. சித்தார்த் தன்னுடைய நண்பனின் ஆலோசனையால், தன் காதலியின் செல்போனில் உளவு பார்க்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்கிறார். இதன் மூலம் காதலியின் நடவடிக்கையை கண்காணித்து.. தன் மன அமைதியை தொலைக்கிறான். அதன் பிறகு அவன் எடுக்கும் முடிவு என்ன? என்பதுதான் இப்படத்தில் கதையாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. இதனையொட்டியே படத்தின் முன்னோட்டமும் இடம்பெற்றிருக்கிறது.‌ இதனால் இந்தத் திரைப்படத்திற்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என அவதானிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19
news-image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின்...

2024-04-12 01:09:32
news-image

அமீரின் தேர்தல் கால முழக்கமாக ஒலிக்கும்...

2024-04-11 21:33:36
news-image

நடிகர் அவினாஷ் நடிக்கும் 'நாகபந்தம்' டைட்டில்...

2024-04-11 02:21:33
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-11 02:17:58
news-image

நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடிக்கும்...

2024-04-11 02:01:18