வாரிசை களமிறக்கிய இயக்குநர் முத்தையா

22 Feb, 2024 | 05:20 PM
image

தமிழ் திரையுலகில் நட்சத்திர பிரபலங்களின் வாரிசுகள் கலை சேவை செய்ய திரையில் அறிமுகமாவது வாடிக்கை. அந்த வகையில் 'கொம்பன்', 'மருது', 'புலிக்குத்தி பாண்டி', 'விருமன்' ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா பெயரிடப்படாத திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதற்கான தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் முத்தையா மண் சார்ந்த படைப்புகளை கமர்சியலாக உருவாக்கி வெற்றி காண்பதில் தனி பாணியை உருவாக்கியவர். இவர் தற்போது தன்னுடைய மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். இவரின் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் விஜய் முத்தையா கதாநாயகனாக நடிக்க  அவருக்கு ஜோடியாக நடிகைகள் தர்ஷினி மற்றும் பிரிகிடா சகா நடிக்கிறார்கள். 

எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைக்கிறார். 

கிராமிய பின்னணியில் தயாராகும் இந்த திரைப்படத்தை கே கே ஆர் சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் பாண்டியன் தயாரிக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் விஜய் முத்தையா புதுமுக நடிகர் என்பதால் இவருடன் இணைந்து நடிப்பதற்கு புது முகங்களை தெரிவு செய்து நடிக்க வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது என்றும், படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், படத்தின் சண்டைக் காட்சி மட்டும் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமான அரங்கம் அமைத்து படமாக்க உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். 

தமிழ் சினிமாவிற்கு இளம் எக்சன் ஹீரோ தயாராகியிருப்பதாக.. விஜய் முத்தையாவிற்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19
news-image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின்...

2024-04-12 01:09:32
news-image

அமீரின் தேர்தல் கால முழக்கமாக ஒலிக்கும்...

2024-04-11 21:33:36
news-image

நடிகர் அவினாஷ் நடிக்கும் 'நாகபந்தம்' டைட்டில்...

2024-04-11 02:21:33
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-11 02:17:58
news-image

நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடிக்கும்...

2024-04-11 02:01:18