இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் 'ரோமியோ' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'செல்லக்கிளி' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ரோமியோ' எனும் திரைப்படத்தில் விஜய் அண்டனி, மிருனாளினி ரவி, யோகி பாபு, வி டி வி கணேஷ், இளவரசு, 'தலைவாசல்' விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாரூக் ஜே. பாஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் தனசேகர் இசையமைத்திருக்கிறார்.
காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் உணர்வுபூர்வமான படைப்பை விஜய் அண்டனி ஃபிலிம் கொர்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மீரா விஜய் அண்டனி தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.
'உன்னருகில் நான் இருந்தும் உன்னை நெருங்க முடியாமல் வழியின்றி நான் தவிக்கிறேன் கண்ணே..'என்ற பின்னணி குரலுடன் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர்கள் விஜய் அண்டனி, ஹேமந்த் பிரகாஷ், ஜெனிபர் ராஜசேகர் ஆகியோர் இணைந்து எழுத, பின்னணி பாடகர் ஆர்கே ஆதித்யா பாடியிருக்கிறார்.
மெல்லிசையாக ஒலிக்கும் இந்தப் பாடலின் தாளமும், லயமும், பாடல் வரிகளும் இசை ரசிகர்களின் பெரு விருப்பத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் இருப்பதால்... அவர்களின் ஆதரவை தொடர்ந்து பெற்று வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM