'அயோத்தி' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் தமன் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஒரு நொடி' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதற்கான காணொளி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதனை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அண்டனி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஒரு நொடி' திரைப்படத்தில் தமன் குமார், எம். எஸ். பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, பழ. கருப்பையா, தீபா ஷங்கர், சிவரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கே. ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார்.
திகில் மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மதுரை அழகர் புரொடக்சன் கம்பனி மற்றும் வைட் லேம்ப் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் கதையின் நாயகனான தமன் குமார் பரிதி இளமாறன் எனும் வேடத்தில் காவல்துறை அதிகாரியாக தோன்றுகிறார். இவர் விசாரிக்கும் வழக்கு ஒன்றின் புலனாய்வு பாணி வித்தியாசமாகவும், சுவாரசியமாகவும், ஏராளமான திருப்பங்களுடன் இருக்கும் என படக் குழு உறுதியளித்திருக்கிறது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM