சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தென்னாபிரிக்க அணி வீரர் டுபிளசிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடைபெற்றுவருகின்றது.

இதன்போது இந்திய அணித் தலைவரும் அவுஸ்திரேலிய அணித் தலைவரும் நடந்துக்கொண்ட விதம் தொடர்பில் ஊடகங்கள் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வந்தன.

எனினும் இது தொடர்பில் ஆராய்ந்த ஐ.சி.சி. எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

இதேவேளை அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது டுபிளசிஸ் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டது. 

குற்றச்சாட்டை டுபிளசிஸ் மறுத்த போதிலும், அவரது போட்டிக் கட்டணத்தில் அவருக்கு 100 சதவீதம் அறவிடப்பட்டது.

இதனால் ஐ.சி.சி. இரட்டை நிலைப்பாட்டைக்கொண்டுள்ளதாக இவர் குற்றச்சாட்டியுள்ளார்.