(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா? அல்லது விபத்தா? என்பதில் சந்தேகம் உள்ளது.குற்றப்புலனாய்வுத் திணைக்களம் துரிதகரமான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும்.
சனத் நிஷாந்தவை போன்று அரசியல்வாதிகள் அனைவரும் இறக்க வேண்டும் என 3 பேரை கொண்டவர்கள் கருதுகிறார்கள் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவுக்கான அனுதாப பிரேரணையில் உரையாற்றுகையில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா? அல்லது விபத்தா, என்பதில் பாரிய சந்தேகம் உள்ளது. இதனால் தான் அவரது மனைவி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார். ஆகவே இந்த முறைப்பாட்டை துரிதமாக விசாரணை செய்து உண்மையை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் விமர்சிப்பது தற்போது புதிய கலாச்சாரமாக காணப்படுகிறது. 225 பேரில் மூன்று தரப்பினரை கொண்டவர்கள் முழு அரசியல் கட்டமைப்பையும் விமர்சிக்கிறார்கள். அரசியல் கலாசாரத்துக்கு எதிரான கருத்துக்களையும் குறிப்பிடுகிறார்கள்.
சனத் நிஷாந்த கௌரவமானவர், பண்பானர், மனிதாபிமானமிக்கவர், பாராளுமன்றத்தில் சிறந்த முறையில் செயற்பட்டார். அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவரது இறப்புக்கு வருகை தந்த பெருந்திரளான மக்கள் அந்த குற்றச்சாட்டுக்களை பொய்யாக்கினார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த உயிருடன் இருக்கும் போதும் சமூக வலைத்தளங்கள் அவரை கடுமையாக விமர்சித்தன. அவர் உயிரிழந்த பின்னரும் கடுமையாக விமர்சிக்கின்றன. அவரை கழுதை என்று விமர்சித்ததுடன் புத்தளம் மாவட்ட மக்களையும் கழுதைகள் என்று விமர்சிக்கும் மனநிலையில் தான் ஊடகங்கள் இருந்தன.
சனத் நிஷாந்தவை போன்று பெரும்பாலான அரசியல்வாதிகள் இறக்க வேண்டும் என்று மூன்று பேரை கொண்டுள்ள அரசியல் தரப்பினர்கள் நினைக்கிறார்கள்.பொய்யான கருத்துக்களை குறிப்பிட்டு மக்களை தவறான வழிநடத்துகிறார்கள்.இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM