கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகமும் சன சமூக நிலையமும் இணைந்து தமது மறைந்த அங்கத்தவர்கள் மூவர் நினைவாக கிரிக்கட் சுற்றுப் போட்டி ஒன்றினை வருடாவருடம் நடத்தி வருகின்றன.
விக்ரம் - ராஜன் - கங்கு ஞாபகார்த்தச் சுற்றுப் போட்டி என அழைக்கப்படும் இத்தொடரின் 33வது வருட சுற்றுப் போட்டி நாளை வெள்ளிக்கிழமை (23) காலை 8:30 மணிக்கு கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இதில் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஆறு பிரதான கழகங்கள் பங்குபற்றுகின்றன. மூன்று நிரந்தர அணிகளான கொக்குவில் மத்தி சனசமூக நிலைய அணி, யாழ். பல்கலைக்கழக அணி மற்றும் ஜொலி ஸ்ரார்ஸ் அணி என்பவற்றுடன் வருடாவருடம் மேலும் மூன்று அணிகள் வளர்மதி விளையாட்டுத்துறைக் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் அணிகளுமாக மொத்தம் ஆறு அணிகள் பங்கெடுக்கின்றன.
அந்த வகையில், இந்த வருடத்தில் தெரிவு செய்யப்பட்ட அணிகளாக யூனியன் விளையாட்டுக் கழகம், ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் Grass Hoppers விளையாட்டுக் கழக அணிகள் பங்கேற்கின்றன.
மட்டுப்படுத்தப்பட்ட 30 ஓவர்கள் கொண்ட இப்போட்டிகளின் இறுதிப் போட்டியானது மட்டுப்படுத்தப்பட்ட 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருக்கும். மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM