16 வய­திற்­குட்பட்­ட­வர்­க­ளுக்­கான 4 நாடுகள் பங்கு­பற்றும் கால்­பந்­தாட்டத் தொடர் தற்­போது கொழும்பு குதி­ரைப்­பந்­தயத் திடல் மைதா­னத்தில் நடை­பெற்­று­வ­ரு­கி­றது.

இலங்கை, ஜப்பான், நேபாளம் மற்றும் பூட்டான் அணிகள் பங்­கு­பற்றும் இந்தப் போட்டித் தொடர் கடந்த சனிக்­கி­ழமை ஆரம்­ப­மா­னது.

இதில் நடை­பெற்ற முத­லா­வது போட்­டியில் நேபாளம் அணி பூட்டான் அணியை 7–-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்­றி­யீட்டி அசத்­தி­யது. 

அதே தின­தினத்தில் நடை­பெற்ற இரண்­டா­வது போட்­டியில் ஜப்­பானை எதிர்த்­தா­டிய இலங்கை அணி 1–3 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் தோல்­வி­யுற்­றது.

நேபாளம் மற்றும் பூட்டான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டியில் ஆரம்­பத்­தி­லி­ருந்தே ஆதிக்கம் செலுத்­திய நேபாளம் தமது முதல் கோலினை 9ஆவது நிமி­டத்தில் பெற்­றுக்­கொண்­டது

அடுத்த நிமி­டமே விரை­வாக செயற்­பட்ட நேபாளம் அணி­யா­னது மீண்டும் ஒரு முறை சிறப்­பாக விளை­யாடி 2ஆவது கோலை அடித்­தது. 

4 நிமி­டங்­களின் பின்னர் கார்லோஸ் நேபாள அணிக்­கான 3 ஆவது கோலை அடிக்க, 19ஆவது நிமி­டத்தில் பிரஜேஷ் மேலும் ஒரு கோலைப் போட்டு நேபாள அணிக்கு பலம் சேர்த்தார்.

முதற் பாதி முடி­வ­டை­வ­தற்கு முன்னர் 26 ஆவது நிமி­டத்தில் மற்­று­மொரு கோலை நேபாளம் பெற்­றுக்­கொண்­டது. 5 – 0 என முன்­னிலைப் பெற்­றது நேபாளம்.

இரண்­டா­வது பாதியில் தனது முதல் கோலை பூட்டான் அணி பெற்­றுக்­கொண்­டது.  எனினும் போட்­டியில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்­திய நேபாளம் 60 ஆவது மற்றும் 69 ஆவது நிமி­டங்­களில் 2 கோல்கள் அடித்து 7–1 என வெற்­றி­பெற்­றது.

இலங்கை மற்றும் ஜப்பான் அணி­க­ளுக்கு இடை­யி­லான போட்­டியில் ஜப்பான் அணியே ஆதிக்கம் செலுத்தியது முதல் 20 நிமி­டங்­க­ளுக்குள் 2 கோல்­களை பெற்­றுக்­கொண்­டது. எனவே ஜப்பான் அணி­யா­னது ஆதிக்கம் செலுத்தி மீண்டும் ஒரு கோல் அடித்து 3–-0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் முன்­னிலை பெற்­றது. எனினும் போட்­டியை விட்­டுக்­கொ­டுக்­காத இளம் இலங்கை அணி வீரர்கள்இ முதற் பாதி முடி­வ­டை­வ­தற்கு முன்­ன­ராக ஒரு கோல் அடித்­தனர். முர்ஷித் முதல் கோலை அடித்தார்.

அதன்பிறகு பெரிதும் போராடிய இலங்கை அணியால் எவ்வித கோலும் பெற்றுக் கொள்ள முடியாமல் போக 3–1 என்ற கோல்கள் அடிப் படையில் ஜப்பான் வென்றது.