உக்ரைன் யுத்தம் - ஏவுகணை தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட ரஸ்ய படையினர் பலி

Published By: Rajeeban

22 Feb, 2024 | 10:51 AM
image

உக்ரைனின் ஏவுகணை தாக்குதல் காரணமாக 60க்கும் மேற்பட்ட ரஸ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பயிற்சி தளமொன்றில்  முக்கிய அதிகாரியின் வருகைக்கான படையினர் தயார் நிலையிலிருந்தவேளை உக்ரைன் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக பிபிசி தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

பெருமளவு ரஸ்ய படையினர் உயிரிழந்துள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான தாக்குதலொன்று இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ள ரஸ்ய அதிகாரியொருவர் எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சைபீரியாவை தளமாக கொண்ட படையணியின் படையினர் ட்ருடொவ்ஸ்கே கிராமத்திற்கு அருகில் உள்ள பயிற்சி தளத்தில் தளபதியொருவரின் வருகைக்காக காத்திருந்தவேளை உக்ரைனின் ஏவுகணைகள் அவர்களை தாக்கியுள்ளன.

தங்களை தங்களின் தளபதிகள் திறந்தவெளியொன்றில் நிற்கவைத்திருந்தனர் அவ்வேளை ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது என ரஸ்ய வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தளத்தில் உயிரிழந்த நிலையில் பல ரஸ்ய வீரர்கள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பாதுகாப்புப் படை வீரரை கைதுசெய்தது...

2025-04-24 21:22:34
news-image

இந்திய விமானங்களிற்கு தனது வான்எல்லையை மூடியது...

2025-04-24 17:17:11
news-image

"பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி...

2025-04-24 17:00:45
news-image

'அவர் எங்களின் கவசம் - எங்களின்...

2025-04-24 15:26:23
news-image

பஹல்காம் பயங்கரவாதிகள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு...

2025-04-24 14:31:49
news-image

யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல வேண்டாம்’ -...

2025-04-24 13:14:51
news-image

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி :...

2025-04-24 07:18:18
news-image

துருக்கியை தொடர்ச்சியாக தாக்கியுள்ளபூகம்பங்கள் - சேதவிபரங்கள்...

2025-04-23 16:37:49
news-image

துருக்கியில் பூகம்பம்

2025-04-23 16:12:35
news-image

ரஸ்யாவில் ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளில்...

2025-04-23 14:57:29
news-image

காஷ்மீர் தாக்குதல்: திருமணம் நடந்து 3...

2025-04-23 14:52:20
news-image

பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கைகளிற்காக மாணவர்களை தடுத்துவைத்திருப்பது...

2025-04-23 14:03:20