ஆப்கானிஸ்தான் இலங்கை அணிகளிற்கு இடையிலான மூன்றாவது ரி20 போட்டியில் நடுவர் நோபோல் வழங்க தவறியதால் சர்ச்சை மூண்ட நிலையில் நடுவர் லின்டால் ஹனிபலை இலங்கை ரி20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க கடுமையாக விமர்சித்துள்ளார்.
வெற்றிபெறுவதற்கு 210 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இறுதி ஓவரில் 19 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் காணப்பட்டது – கமிந்து மென்டிஸ் களத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தார்.
ஆப்கான் வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்தினை நடுவர் நோபோல் என அறிவிக்காதை தொடர்ந்து கமிந்துமென்டிஸ் களத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் நடுவர்கள் அதனை ரிவியு செய்யுமாறு கேட்டார்.ரீப்ளேக்கள் அந்த பந்தின் உயரத்தினை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது அதனை நோபோல் என அறிவித்திருக்கவேண்டும் என்பதை உறுதி செய்தன.
இலங்கை அணி மூன்று ஓட்டங்களால் தோல்வியடைந்த பின்னர் அணியின் தலைவரும் பயிற்றுவிப்பாளரும் நடுவர்களுடன் மைதானத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த வனிந்துஹசரங்க சர்வதேச போட்டிகளில் இது இடம்பெறமுடியாது அந்த பந்து இன்னும் சற்று உயரமாகயிருந்தால் துடுப்பாட்டவீரரையே காயப்படுத்தியிருக்கும் இதனை கவனிக்க முடியாவிட்டால் நடுவர் தகுதியற்றவர் என்பதே அர்த்தம் அவர் வேறு வேலை பார்க்கலாம் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM