அரபு புத்தங்களை நாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு அமைச்சு விதித்திருக்கும் தடையை மீள பெற்றுக்கொள்ள  ஜனாதிபதி  நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரிஷாத் பதியுதீன் சபையில் கோரிக்கை

Published By: Vishnu

22 Feb, 2024 | 01:23 AM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

ஈஸ்டர் குண்டுத்தாக்குலைத் தொடர்ந்து மூடப்பட்ட ராகம மற்றும் மஹர பள்ளிவாசல்களை மீள திறப்பதற்கு அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அரபு புத்தங்களை நாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு அமைச்சு விதித்திருக்கும் தடையை மீள பெற்றுக்கொள்ள  ஜனாதிபதி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற  நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஈஸ்டர் குண்டுத்தாக்குலை தொடர்ந்து அரபு புத்தங்களை நாட்டுக்கொள் கொண்டுவர தடைவித்தித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கடிதம் இன்னும் அமுலில் உள்ளது. அதனால் நாட்டில் இருக்கும் அரபு மத்தரசாக்களுக்கு தேவையான அரபு பத்தகங்களை கொண்டுவர முடியாத நிலை இருந்து வருகிறது.

அதேபோன்று அரபு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கூட அரபு புத்தகங்களை கொண்டுவர முடியாத நிலை இருந்து வருகிறது. அதனால் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி இதுதொடர்பாக அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டு குறித்த கடிதத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் ராகம வைத்தியசாலையில் ஒரு பள்ளிவாசல் இருந்தது அதில் வைத்தியசாலைக்கு வருபவர்கள் மற்றும் வைத்தியர்கள் தொழுகையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால். ஈஸ்டர் குண்டு தாக்குதலைத் தொடர்ந்து அந்த பள்ளிவாசல் மூடப்பட்டது. குண்டுத் தாக்குதலுக்கும் அந்த பள்ளிவாசலுக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறேன். அதேபோன்று நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் தோட்டத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு அருகில் சுமார் 100 பேச் காணியில் இஸ்லாமிய நிறுவனம் ஒன்று, பள்ளிவாசலுக்கு வருமானமாக 5 வீடுகளை கட்டிக்கொடுத்தது.

ஆனால் அந்த பிரதேச செயலாளர் அந்த வீடுகளை அரசுடமையாக்க வேண்டும் என தெரிவித்து, வழக்கு தொடுத்ததுடன் மூலம், ஏழை மக்களுக்கு நீதிமன்றம் செல்ல வசதி இல்லாத காரணத்தினால், நீதிமன்றமும் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டு, அந்த 5 வீடுகளையும் அரசுடமையாக்கி தீப்பளித்திருக்கிறது.

இதுதொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஷ்வரனுக்கும் பல தடவைகள் தெரிவித்தேன். கடிதம் மூலமும் தொலைபேசி மூலம் தெரிவித்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் நுவரெலியா மாவட்டத்தில் சிறுபான்மையாக வாழும் அந்த முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அந்த அரச அதிகாரி யார் என தேடிப்பார்த்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, குறித்த காணியை பள்ளிவாசலுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மஹர சிறைச்சாலைக்கு அருகில் இருந்த 100 வருடத்துக்கும் அதிக பழைமைவாய்ந்த பள்ளிவாசல் மூடப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து பள்ளிவாசலை மீள திறப்பதற்கோ அல்லது அந்த பிரதேசத்தில் 40பேச் காணி வழ்ங்கினால் நாங்கள் பள்ளிவாசல் ஒன்றை கட்டிக்கொடுப்போம் என நீதி அமைச்சரிடம்  பல தடவைகள் தெரிவித்திருக்கிறோம்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எதிர்வரும் ரமழானில் அந்த பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு மார்க்க கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால இதுதொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 12:03:28
news-image

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-01-18 11:50:50
news-image

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

2025-01-18 11:53:22
news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21
news-image

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-01-18 11:35:22
news-image

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

2025-01-18 11:31:04
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23
news-image

மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2025-01-18 11:15:47
news-image

கடலில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம்...

2025-01-18 10:48:36
news-image

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர் ஐரோப்பிய ஒன்றிய...

2025-01-18 10:27:43
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-01-18 10:17:40