வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க மாற்றம் தற்போது கிழக்கு பாகத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இன்றும் அதிக மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் தென் கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளை தவிர்த்து கொள்ளுமாறு காலநிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.