ஹிப் ஹொப் ஆதி தமிழா நடிக்கும் 'பி. டி. சார்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

21 Feb, 2024 | 07:27 PM
image

இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹொப் ஆதி தமிழா கதையின் நாயகனாக நடித்து வரும் 'பி. டி. சார்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழு பிரத்யேக காணொளியை வெளியிட்டு அறிவித்திருக்கிறது.‌

'நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பி. டி. சார்' எனும் திரைப்படத்தில் ஹிப் ஹொப் ஆதி தமிழா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மிரா பர்தேசி நடித்திருக்கிறார். இவருடன் கே. பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன், தியாகராஜன், இளவரசு, பட்டிமன்றம் ராஜா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹொப் ஆதி தமிழா இசையமைத்திருக்கிறார். பாடசாலைகளில் மாணவ மாணவியருக்கு விளையாட்டுகளை கற்பிக்கும் விளையாட்டு துறை ஆசிரியரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார்.

கடந்த ஓராண்டுக்கு மேல் தயாரிப்பில் இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருப்பதாகவும், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே இசை, நடிப்பு என இரட்டைக் குதிரையில் ஒரே தருணத்தில் சவாரி செய்யும் ஹிப் ஹொப் ஆதி இரண்டிலும் தன்னுடைய வெற்றி முத்திரையை பதிக்காமல் தடுமாறி வருகிறார் என்பதும், இப்படம் வெளியாகி வெற்றி பெற்றால் அவர் நடிப்பை தொடர கூடும் என்றும், இல்லையேல் இசையில் மட்டும் கவனம் செலுத்த போவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19
news-image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின்...

2024-04-12 01:09:32
news-image

அமீரின் தேர்தல் கால முழக்கமாக ஒலிக்கும்...

2024-04-11 21:33:36
news-image

நடிகர் அவினாஷ் நடிக்கும் 'நாகபந்தம்' டைட்டில்...

2024-04-11 02:21:33
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-11 02:17:58
news-image

நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடிக்கும்...

2024-04-11 02:01:18