(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்காக மத்திய வங்கியை சுயாதீனப்படுத்திக் கொடுக்கவில்லை.மத்திய வங்கியின் ஆளுநரின் செயற்பாடு முற்றிலும் தவறானது,ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என சுற்றாடல் துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் எடுத்துள்ள தீர்மானம் முற்றிலும் தவறானது.
மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்காக 'புதிய வங்கி சட்டம் ' இயற்றப்படவில்லை.
நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லை.தன்னிச்சையான முறையில் வங்குரோத்து நிலையை அறிவித்தார்.
நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு என்பதை அவர் கவனத்திற் கொள்ளவில்லை.மத்திய வங்கி ஆளுநரின் தவறான தீர்மானத்தால் நாடு என்ற ரீதியில் மீண்டெழ முடியாமல் உள்ளது.
மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக இருந்தால் தொழில் செய்யும் அனைவரின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும்.
நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகின்ற போது மத்திய வங்கியின் ஆளுநர் நகைப்புக்குரிய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்.ஆகவே மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM