காதல், சாதி விவகாரம் : வீடு தீக்கிரை, வாள் வெட்டுத்தாக்குதல் - வவுனியாவில் சம்பவம்

Published By: Priyatharshan

13 Mar, 2017 | 11:39 AM
image

வவுனியாவில் சாதி விவகாரத்தினால் வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் இனந்தெரியாத நபர்களினால் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா தரணிக்குளத்தில் வசித்து வரும் இருவருக்கிடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஒருவருடகாலமாக இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரியாமலேயே இருந்துள்ளது.

இவர்களது காதல் பெண் வீட்டாருக்கு தெரியவந்ததுடன் பெண் வீட்டார் குறித்த பெண்ணை வெளிநாடு ஒன்றிக்கு அனுப்புவதற்குரிய ஏற்ப்பாடுகளை மேற்கொண்டனர்.

இதனையறிந்த பெண் தனது காதலுக்கு இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்றால் நான் இறந்து விடுவேன் என்னை எங்கேயாவது கூட்டிச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் கதைத்து ஒருவாரத்தின் பின்னர் இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்று கொழும்பில் தனிமையில் ஒருமாத காலம் வாழ்ந்து வந்துள்ளனர்.

பெண் வீட்டார் தாங்கள் நல்ல சாதியெனவும் ஆண் வீட்டார் தரக்குறைவான சாதியயெனவும் தெரிவித்து, இவர்களை தேட ஆரம்பித்தனர். இவர்கள் கிடைக்காதவிடத்து பெண்ணின் புகைப்படத்தினை முகநூலில் பிரசுரித்து இவரை காணவில்லை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இவர்களின் முகநூல் பதிவினை கண்ணுற்ற ஒருவர் இவர்களை கொழும்பில் வைத்து அடையாளம் கண்டுள்ளார். உடனே இவர்களின் முகநூல் பதிவில் காணப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பினை மேற்கொண்டு அவர்கள் இங்கு உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

கொழும்பிற்கு விரைந்த பெண் வீட்டார்  குறித்த பெண்ணை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து தப்பித்து வவுனியாவிற்கு வந்த பெண் தனது காதலனுக்கு தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டு தான் தற்போது வவுனியாவில் நிற்கின்றேன் என்னை அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். 

உடனே வவுனியாவிற்கு சென்ற குறித்த இளைஞன் பெண்ணை அழைத்து ஈச்சங்குளம் பொலிஸ்நிலையத்திற்கு சென்றுள்ளார். பெண் வீட்டாரிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு தருமாறு தெரிவித்துள்ளார்.

ஈச்சங்குளம் பொலிஸார் குறித்த பெண் மற்றும் இளைஞனை சேர்ந்து செல்லுமாறு பணித்துள்ளனர். இருவரும் குறித்த இளைஞனின் வீட்டில் இருந்த சமயத்தில் கடந்த 11 ஆம் திகதி மதியம் 2.30 மணியளவில் பெண் வீட்டார் வெள்ளை நிற வாகனத்தில் (வாகன இலக்கம் 56-6881) இளைஞனின் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொண்டு குறித்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் குறித்த பெண்ணின் வீட்டை இனந்தெரியாத நபர்கள் தீக்கிரையாக்கியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மற்றும் தடவியல் பிரிவினர் தீக்கிரையான வீட்டில் கைரேகையடையாளங்களை பார்வையிட்டதுடன் குறித்த இளைஞன் வீட்டார் மீது தாக்குதல் மேற்கொண்ட வாள்கள் மற்றும் பாரிய கத்திகளை கைப்பற்றியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் பெண் வீட்டாரின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04