கைவிடப்பட்ட கிண்ணியா, வடசல் பால கட்டுமானப் பணிகள் : போக்குவரத்துச் சிக்கல்களை எதிர்கொள்ளும் மக்கள்

21 Feb, 2024 | 03:10 PM
image

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூவரசம் தீவையும் கல்லடி வெட்டுவானையும் இணைக்கும் வடசல் பாலம் கட்டுமான வேலைகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பிரதேச மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

2021.10.16 அன்று இப்பாலத்துக்கான அடிக்கல்லை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்   நட்டுவைத்தார்.

ஆறு மாதங்களுக்குள் பாலத்தை கட்டி முடித்து தருவதாக மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், இன்னும் அவை நிறைவேற்றப்படவில்லை. 

இப்பகுதியில் சுமார் ஆறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயணம் செய்து வருகின்றனர். 

அன்றாட ஜீவனோபாயத்துக்காக விவசாயம், சிறு மீன்பிடித் தொழில் போன்ற வேலைகளில் ஈடுபடும் பலர் இந்த ஆற்றை கடந்தே செல்லவேண்டியுள்ளது. 

இந்நிலையில், பாலம் கட்டும் வேலைகள் நிறைவு செய்யப்படவில்லை. மூன்று வருடங்கள் கடந்து நான்காவது வருடம் ஆரம்பித்த போதிலும் மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வகையில் பாலம் கட்டி முடிக்கப்படவில்லை. 

எனவே, கட்டுமான வேலைகளை முடித்து, வீதியை சீராக அமைத்து, மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பாலத்தின் சில பகுதிகள் கட்டப்பட்டுள்ள  போதிலும், இரு புறத்திலும் உள்ள வீதிகள் செப்பனிடப்படவில்லை. இதனால் மக்களால் அவ்வீதி வழியே பயணிக்க முடியவில்லை.

அத்தோடு, பூவரசம் தீவிலிருந்து கல்லடி வெட்டுவானுக்குச் செல்லும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பாடசாலை மாணவர்கள், வியாபாரிகள், கர்ப்பிணி தாய்மார்கள், நோயாளிகள் என பலரும் பாதை செப்பனிடப்படாததால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

இத்திட்டத்தை முன்னெடுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திருகோணமலை பிரதான பொறியியலாளர் அலுவலகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக இப்பிரச்சினை தொடர்பில் வினவ, அதற்கு பதிலளிக்கையில், கிண்ணியா பிரதேச சபைக்கு உட்பட்ட வடசல் பாலமானது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் Rural Bridge Construction unit இரத்மலானையின் ஊடாக நேரடியான கண்காணிப்பில் பால வேலைகள் நடைபெற்றதால், அங்கு தகவல்களை பெறுமாறு சுட்டிக்காட்டப்பட்டது. 

ஆனாலும், உரிய இரத்மலானைக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட பின்னரும், ஒரு மாதம் கடந்தும் பதில் கிடைக்கவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம், உரிய தகவல் தங்களிடம் இல்லாத பட்சத்தில் இக்கோரிக்கை கடிதத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபையே உரிய பகுதிக்கு அனுப்ப வேண்டும். ஆனாலும் இவர்களின் நடைமுறை சிக்கல் காரணமாக இவ்வாறு இழுத்தடிப்பு செய்யப்பட்டு பால நிர்மாண வேலைகள் வீணடிக்கப்படுகின்றன.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பாலத்தை செப்பனிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கு 118...

2025-03-21 10:10:09
news-image

யாழில் பஸ் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-03-21 10:19:06
news-image

திருகோணமலையில் 13 உள்ளூராட்சி சபைகளுக்கு 138...

2025-03-21 10:00:46
news-image

"Clean Sri Lanka" திட்டத்தின் ​நோக்கத்தை...

2025-03-21 09:57:20
news-image

மன்னாரில் 38 வேட்பு மனுக்கள் தாக்கல்...

2025-03-21 09:56:24
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; மற்றுமொரு...

2025-03-21 10:04:12
news-image

அர்ச்சுனா பேசிய விடயங்களில் தவறுகள் இருந்தால்...

2025-03-21 10:01:35
news-image

வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இடச்சென்ற நபர்...

2025-03-21 10:00:27
news-image

வாரியப்பொலவில் இலங்கை விமானப்படை விமானம் விபத்து...

2025-03-21 09:47:43
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் 34 வேட்புமனுக்கள் ஏற்பு...

2025-03-21 09:59:18
news-image

கொச்சிக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம்...

2025-03-21 09:54:55
news-image

திருகோணமலை மாவட்டத்தில் 103 அரசியல் கட்சிகளும்...

2025-03-21 09:51:06