கண்டி - மஹய்யவைப் பிதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சாதாரண சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் மயக்க ஊசியின் விளைவாக மரணடைந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் வைத்தியத்துறைப் பேராசிரியர் ஒருவர் , சட்டத்தரணியூடாக நீதிமன்றில் ஆஜராகி பிணையில் விடுலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர் கண்டி சுதும்பொல விகார மாவத்தயைச் சேர்ந்த பாத்திமா அஸ்மா  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 25 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பெண்ணுக்கு சாதரணமான சத்திர சிகிச்சை செய்யப்படவேண்டும் என்று தெரிவித்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி நினைவிழக்கும் ஊசி போடப்பட்டதாகவும், அதன் பின்பே இவ் விபரீதம் ஏற்பட்டதாக உறவினர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோனைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.