இன்று சர்வதேச தாய்மொழி தினம் 

21 Feb, 2024 | 12:08 PM
image

உலகளாவிய ரீதியில் இன்று பெப்ரவரி 21ஆம் திகதி சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

பிரதேசம், மாவட்டம், மாகாணம், மாநிலம், நாடு, கண்டம் எங்கும் சுமார் 6 ஆயிரம் மாறுபட்ட மொழிகள் பேசப்படுகின்றன. 

அந்த வகையில் மனிதர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தாய்மொழி உண்டு. ஒவ்வொரு தனி நபரும் அவரது தாய்மொழியை போற்றிப் பேணுவதும், அதன் தனித்தன்மையை பாதுகாப்பதும் தலையாய கடமை என்பதையே இந்த சர்வதேச தாய்மொழி தினம் உணர்த்துகிறது. 

1952ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி வங்காள மொழியை தேசிய மொழியாக அறிவிக்க கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் நான்கு பேர், அப்போதைய பாகிஸ்தான் அரசின் அதிரடி நடவடிக்கையால் ஆர்ப்பாட்டத்தின்போது கொல்லப்பட்டனர். பல மாணவர்கள் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்தால் பெப்ரவரி 21ஆம் திகதியை சர்வதேச தாய்மொழி தினமாக அனுஷ்டிக்குமாறு 1999ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது. 

உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று தொடர்புகொள்ள ஊடகமாக இருப்பது மொழியாகும். 

விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகளுக்கும் கூட, உணர்வுகளை பரிமாறிக்கொள்ள ஒவ்வோர் இனத்துக்கும் தனித்தனி மொழிகள் உள்ளன. எனினும், அவற்றின் பாஷைகள் மனிதர்களுக்கு பெரும்பாலும் புரிவதில்லை. 

மனிதர்களுக்குள்ளும் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள பேசும் மொழிகளில் எத்தனையோ வேறுபாடுகள் காணப்படுகின்றன. 

உலகில் பேசப்படும் 6 ஆயிரம் மொழிகளில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழானோர் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் 10 ஆயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. எனினும், இவற்றில் எல்லா மொழிகளும் எல்லோருக்கும் புரிவதில்லை. 

எனினும், நாம் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

உலகில் 94 நாடுகளில் கிட்டத்தட்ட 8 கோடி பேர் தமிழ் மொழியை பேசுபவர்களாக உள்ளனர். 

எனினும், தமிழ் பேசுபவர்கள் வசிக்கும் நாடுகள் அனைத்திலும் தமிழ் அரச மொழியாக அங்கீகாரம் பெறவில்லை. தமிழர்கள் அதிகமாக வாழும் இந்தியாவிலும் தமிழ் அரச மொழியாக்கப்படவில்லை. ஆனால், இலங்கை தமிழை அரச கரும மொழியாக அங்கீகரிக்கும் நாடு என்ற வகையில் தனிச்சிறப்பு பெறுகிறது. 

இலங்கையில் மாத்திரமன்றி சிங்கப்பூரிலும் தமிழ் மொழியானது அரச மொழிகளில் ஒன்றாக விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

நாம் நமது தாய்மொழியான தமிழின் தனித்துவத்தை, மகத்துவத்தை உணர வேண்டும். தமிழில் பேசுவதை பெருமையாக கருத வேண்டும். 

தமிழ் பேசுபவர்கள் எத்தனை பிற மொழிகளை பேசத் தெரிந்திருப்பினும், தமிழ் மொழியின் உன்னதத்தை மறந்து, மொழிச் சிதைவு செய்பவர்களாக இருந்தால், அது, தாயை உதாசீனப்படுத்துவதைப் போன்றது என தமிழ்ப் பற்றாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இன்று பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருவதோடு, பல சாதனைகளை நிலைநாட்டி, தமிழுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். 

பிற மொழிகளை பேசவேண்டிய சூழ்நிலை தற்காலத்தில் ஏற்பட்டுள்ளபோதும், தமிழ் மொழியை பாதுகாத்து, தமிழ்க் கல்வி முறைக்கும் இடமளித்து, வருங்கால சந்ததிக்கும் தமிழுணர்வை கடத்துவோம்! 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த...

2025-01-18 16:50:18
news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17
news-image

“சாகித்திய ரத்னா” உயர் அரச விருது...

2024-12-28 12:49:25
news-image

திருமண தடையை அகற்றி, மங்கல்ய யோகம்...

2024-11-15 16:38:08
news-image

இழப்பிலிருந்தே படைப்பு பீறிட்டுக் கிளம்புகிறது! –...

2024-11-06 05:11:38
news-image

கந்தன் துணை : கந்த சஷ்டி...

2024-11-02 13:18:19