(நெவில் அன்தனி)
கல்கிஸ்ஸை பரி. தோமஸ் கல்லூரிக்கும் கண்டி திரித்துவ கல்லூரிக்கும் இடையில் கல்கிஸ்ஸையில் நடைபெற்ற வருடாந்த கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 114 ஓட்டங்களால் பரி. தோமஸ் அணி வெற்றிபெற்று ரணில் அபேநாயக்க ஞாபகார்த்த கிண்ணத்தை 6 வருடங்களின் பின்னர் தனதாக்கிக்கொண்டது.
கல்கிஸஸை மைதானத்தில் திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் நடைபெற்ற இந்த 2 நாள் வருடாந்த கிரிக்கெட் போட்டியில் திசேன் எஹலியகொட பெற்ற அரைச் சதம், நேதன் கல்தேரா, யட்டிந்த்ர சிறிவர்தன ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளும் பரி. தோமஸ் கல்லூரியின் வெற்றிக்கு அடிகோலின.
அப் போட்டியில் மிக மோசமாகத் துடுப்பெடுத்தாடிய திரித்துவ கல்லூரி இரண்டு இன்னிங்ஸ்களிலும் 65 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
திரித்துவ அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 64 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துடுப்பாட்டத்தில் தரண விமலதர்ம 23 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் நேதன் கல்தேரா 6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் யட்டிந்த்ர 19 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பரி. தோமஸ் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 236 ஓட்டங்களைக் குவித்தது.
திசேன் எஹலியகொட 94 ஓட்டங்களையும் அஷேன் பெரேரா 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் தரண விமலதர்ம 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மலித் ரத்நாயக்க 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
திரித்துவ அணி இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களை இழந்து 58 ஓட்டங்களை மாத்திரம் பெற பரி. தோமஸ் அணி இன்னிங்ஸால் வெற்றிபெற்றது.
பந்துவீச்சில் நேதன் கல்தேரா 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அஷேன் பெரேரா 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் யட்டிந்த்ர சிறிவர்தன 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கவிந்து டயஸ் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM