காசாவில் உடனடி யுத்தநிறுத்தத்தை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக அமெரி;க்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.
ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் உடனடியுத்தநிறுதத்தை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா மூன்றாவது தடவை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடனடி யுத்தநிறுத்தம் பணயக்கைகதிகள் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் என அமெரிக்க தெரிவித்துள்ளது.
அல்ஜீரியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா மாத்திரமே வாக்களித்துள்ளது - பிரிட்டன் வாக்களிப்பை தவிர்த்துள்ள அதேவேளை 13 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.
அமெரிக்காவின் நேசநாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன பாலஸ்தீன மக்களின் மனிதாபிமான தேவையே பிரதானமான விடயம் என இந்த நாடுகள் தெரிவித்;துள்ளன.
30,000த்திற்கும் மேற்பட்டமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை 2மில்லியன் மக்கள் பட்டினியில் சிக்குண்டுள்ள வேளையில் உடனடி யுத்தநிறுத்தத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியமைக்கு எதிராக பரந்துபட்ட கண்டனங்கள் எழுந்துள்ளன.
பாலஸ்தீனியர்களிள் வாழ்வதற்கான உரிமைக்கு இந்த நகல் தீர்மானத்தை ஆதரிப்பது முக்கியம் என ஐநாவிற்கான அல்ஜீரிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பது பாலஸ்தீன மக்கள் மீது சுமத்தப்பட்ட கொடுரமான வன்முறைக்கு கூட்டுதண்டனைக்கு ஒப்புதல் அளிப்பதாகும் எனவும் அல்ஜீரியா தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM