ராகம பகுதியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

Published By: Digital Desk 3

21 Feb, 2024 | 10:39 AM
image

ராகம பகுதியில் இன்று புதன்கிழமை (21) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம, எலப்பிட்டிவல சந்தியில் உள்ள இறைச்சிக் கடையொன்றுக்கு அருகிலேயே இன்று காலை 7.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 39 வயதுடைய ஹெட்டி ஆராச்சிகே டொன் சுஜித் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “வெல்லே சாரங்க” வின் உறவினர் என தெரிவிக்கப்படுகிறது. 

அவர்  கந்தானை பகுதியில் வசிப்பதோடு, குறித்த இறைச்சி கடையின் உரிமையாளரும் ஆவார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

2025-02-13 09:30:46
news-image

இன்றும் மின்வெட்டு !

2025-02-13 09:31:17
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் -...

2025-02-13 08:49:04
news-image

இன்றைய வானிலை

2025-02-13 06:05:42
news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50