வாடிக்கையாளரின் சொந்த கடன் அறிக்கையை பெற்றுக் கொள்ளும் சேவையை மேம்படுத்தும் நோக்குடன், இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் (CRIB) தனது டிஜிட்டல் திணைவு செயன்முறையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
நாட்டில் காணப்படும் ஏக கடன் தகவல் தரவுகளை வழங்கும் ஒரே அமைப்பாக திகழும் CRIB, பல்வேறு நாளிகைகளினூடாக தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு ஒன்லைன் கட்டமைப்புகள் மற்றும் வங்கியியல் அப்ளிகேஷன்கள் ஆகியவற்றினூடாக தமது கடன் அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற்கு இலகுவான அணுகல் வாய்ப்பை வழங்குகின்றது.
மாதாந்தம் சேகரிக்கப்படும் கடன் தரவுகள் சர்வதேச ரீதியில் பின்பற்றப்படும் செயன்முறைகளுக்கமைய காணப்படுவதுடன், நிதிசார் உறுதித் தன்மையை பேணுவதற்கும், பொறுப்பு வாய்ந்த கடன் நடத்தையை ஊக்குவிப்பதற்கும், அதனூடாக இலங்கையின் பொது மக்களுக்கு முறைசார் நிதித் துறையில் கடன் அணுகலை மேம்படுத்தவும் வாய்ப்பளிக்கின்றது. 6.7 மில்லியன் தனிநபர்களின் 10 மில்லியனுக்கு அதிகமான வசதிகளை மாதாந்தம் CRIB நிர்வகிப்பதுடன், இலங்கையின் மொத்த சனத்தொகையில் 41% வயது வந்தவர்களின் சனத்தொகையை பிரதிநிதித்துவபடுத்துவதாக அமைந்துள்ளது.
இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் தனிநபர் அல்லது வியாபாரத்துக்கு தமது கடன் தகவல்களை கோரிப் பெற்றுக் கொள்ளும் வசதியை “Self Inquiry Credit Report” அல்லது “CRIB iReport”ஊடாக வழங்குகின்றது.
பல்வேறு ஒன்லைன் முறைகளினூடாக iReportகளை பணியகம் வழங்குவதுடன். அதனூடாக பொது மக்களுக்கு 24/7 நேரமும் இலகுவாக அணுகும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பின்வரும் வழிமுறைகளில் ஒன்லைன் சேவைகளை பெற முடியும். பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்களுக்கு www.crib.lk ஊடாக ‘Customer Access Portal (CAP), ‘myReport’ இணைய போர்டல் ஊடாக மற்றும் தெரிவு செய்யப்பட்ட இணைய வங்கிச் சேவை நாளிகைகளின் பாவனையாளர்கள்.
ஒன்லைன் சேவைகளுக்கு மேலதிகமாக அலுவலக நேரத்தில் கொழும்பிலுள்ள CRIB அலுவலகத்துக்கு நேரடியாக விஜயம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் தமது iReports களை பெற்றுக் கொள்வதற்கு CRIB வசதியளிக்கின்றது. நாட்டின் எப்பாகத்திலுள்ள எந்தவொரு வங்கிக் கிளைகளினூடாக விண்ணப்பங்களை வாடிக்கையாளர்கள் அனுப்ப முடியம். அதன்போது தமக்குரிய அறிக்கைகளை பதிவுத் தபால் மூலமாக அவர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும்.
தற்போதைய டிஜிட்டல் மயமாக்கல் செயன்முறையை மேலும் மேம்படுத்தும் வகையில், பணியகத்தினால் வாடிக்கையாளர்களளுக்கு. இரு பிரிவுகளில் டிஜிட்டல் உள்வாங்கல் செயன்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனூடாக கட்டமைப்பில் உள்வாங்கப்படாத வாடிக்கையாளர்களை CRIB சேவைகளில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகன்றன.
தொழில்நுட்பத்தின் அனுகூலத்தை பாவனையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் டிஜிட்டல் உள்வாங்கல் செயன்முறையை பணியகம் அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் தரவு நேர்த்தி மற்றும் பாதுகாப்பு நியமங்களை உயர்ந்தளவு உறுதி செய்துள்ளது.
சரியான வாடிக்கையாளருக்கு தகவல் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், அறிக்கைகளை பெற்றுக் கொடுக்கும் முன்னர் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் எற்படும் தாமதங்களை தவிர்க்கும் வகையிலும், ஆட்பதிவுத் திணைக்களத்துடன் அண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் CRIB கைச்சாத்திட்டிருந்தது. ஒன்லைன் சேவை கட்டமைப்பினூடாக நபர்களின் தேசிய அடையாள அட்டை
தகவல்களை உறுதி செய்வதற்கான வசதியை பெற்றுக் கொள்வதற்காக நிதp உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இந்த செயற்பாடு ஒன்றிணைப்பினூடாக, பணியகத்தின் வாடிக்கையாளர் சேவை செயன்முறையை துரிதமாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், பணியகத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கலின் அடுத்த கட்டமான டிஜிட்டல் இணைப்பை மேலும் உயர்த்துவதாகவும் அமைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM