கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்குச் சொந்தமான யானைகளில் ஒன்றான “தந்தயா” என்றழைக்கப்படும் கொம்பன் யானை நேற்று உயிரிழந்துள்ளதாக ஶ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்தார்.

47 வருட வயதுடைய மேற்படி கொம்பன் யானை 1978 ஆம் ஆண்டு விமலா கங்னங்கரா என்ற சீமாட்டியால் ஶ்ரீ தலதா மாளிகைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

1978 இல் இருந்து இதுவரை காலம்  தலதா பெரஹராவில் பங்கெடுத்துள்ளதுடன் பகற் பெரஹராவின் போது இந்த யானையே புனித தந்தத்தை சுமந்து செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.