இன்றைய வானிலை

21 Feb, 2024 | 06:17 AM
image

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய, வடமேல், ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34