ராயன்' ஆக மிரட்டும் தனுஷ்

20 Feb, 2024 | 07:49 PM
image

நடிகரும், இயக்குநருமான தனுஷ் கதையின் நாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் அவருடைய ஐம்பதாவது படத்திற்கு 'ராயன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.‌

நடிகர் தனுஷ் 'பவர் பாண்டி' படத்திற்குப் பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் 'ராயன்'. கேங்ஸ்டர் டிராமா ஜேனரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் தனுஷுடன்  சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ். ஜே. சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல்' ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். வட சென்னையைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார்.

இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் தனுஷ்- சந்தீப் கிஷன்- காளிதாஸ் ஜெயராம் ஆகிய மூன்று நடிகர்களும் தோன்றுவதும், மூவரின் கைகளில் ஆயுதம் தாங்கி இருப்பதும், ரசிகர்களை 'வித்தியாசமான காம்போ' என்றளவில் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.‌ இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த ஆண்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தனுஷ்- அவருடைய திரை பயணத்தில் 50வது படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்திருப்பதால்... இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்க்கும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி'...

2025-03-19 16:02:24
news-image

வெற்றிகரமாக நிறைவடைந்த 'கூலி' திரைப்பட படப்பிடிப்பு

2025-03-19 16:06:28
news-image

இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு...

2025-03-18 17:01:25
news-image

மீண்டும் திரையில் 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ்

2025-03-18 16:15:33
news-image

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படத்தின் 'உருகுது...

2025-03-18 16:00:12
news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23