(நெவில் அன்தனி)
வலைப் பயிற்சியின் போது எதிர்கொள்ளும் கடினமான பந்து வீச்சாளர்களில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவும் ஒருவர் என இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர். முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.
ரங்கிரி, தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான 2ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றியீட்டிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.
'வலைப் பயிற்சியின்போது மதீஷ பத்திரனவை எதிர்கொள்வதே எமக்கு உள்ள மிகப்பெரிய சவால் என நான் கருதுகிறேன். அவரது வித்தியாசமான பந்துவீச்சுப் பாணி காரணமாக பல துடுப்பாட்டவீரர்களுக்கு பந்து தெரிவதில்லை.
மற்றைய விடயம்தான் பந்து வரும் வேகம். மணித்தியாலத்திற்கு 152 கிலோ மீற்றர் வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வரும்போது பந்தை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று நினைக்கிறேன்.
கையை நேராக்கி 150 (கிலோ மீற்றர்) வேகத்தில் பந்துவீசுவது கடினமான காரியம். எனவே அவரது பந்துவீச்சு பாணிக்கு ஏற்ப அவர் பக்கவாட்டில் பந்துவீசும்போது அவரை எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பதை யாருக்கும் நினைத்துப்பார்க்கக் கூடியதாக இருக்கும்.
'அவர் தொழில்முறை கிரிக்கெட் விளையாடி நிறைய அனுபவம் பெற்றுள்ளார். எனவே கடைசி ஓவரில் 12 ஓட்டங்களைத் தக்கவைத்துக்கொள்ளுமாறு அவரை கோரினால், அவர் 10 போட்டிகளில் 9இல் அல்லது 8இல் வெற்றியை ஈட்டிக்கொடுப்பார்.
ஏனெனில் அவ்வளவுக்கு கடினமான பந்துவீச்சாளர் என்பதால் அவரை எதிர்கொள்வது கடினமாகும். எனவே அவரை நாம் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அவரை பாதுகாக்க வேண்டும். அவர் தனது உடல் தகுதியையும் ஒழுக்கத்தையும் மிகவும் சிறப்பாக வைத்திருக்கும் வீரர்' என மேத்யூஸ் குறிப்பிட்டார்.
இரண்டாவது போட்டியில் மதீஷ பத்திரண 4 விக்கெட்களை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை இலகுவாக்கி இருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM