வைபவ் நடிக்கும் ' ரணம் அறம் தவறேல்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

20 Feb, 2024 | 05:28 PM
image

நடிகர் வைபவ் நடிப்பில் பெப்ரவரி 23ஆம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகும் 'ரணம் அறம் தவறேல்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் ஷெரீப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ரணம் அறம் தவறேல்' படத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி கே. ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்திருக்கிறார். க்ரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மது நாகராஜ் தயாரித்திருக்கிறார். 

இவ்விழாவில் இயக்குநர் பேசுகையில், '' கொரோனா காலகட்டத்தில் நாளிதழில் வெளியான செய்தியொன்று கண்ணில் பட்டது. இப்படியெல்லாம் நடக்குமா..! என்ற வியப்பை ஏற்படுத்திய செய்தி அது. மேலும் இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இக்கதையை நானும், ஒளிப்பதிவாளர் பாலாஜியும் இணைந்து பேசத் தொடங்கினோம். 'அறணை மறவேல்' என்ற ஆத்திச்சூடி முதுமொழியை அறிந்திருப்போம். அதனை ஒட்டி இப்படத்தின் கதையை எழுதினேன்.

அறம் என்பது தான தர்மம் மட்டுமல்ல உண்மைக்காக குரல் கொடுப்பது.. அநியாயத்தை எதிர்ப்பது.. என்ற பொருளையும் தருகிறது. இப்படத்தின் கதையை தயாரிப்பாளரிடம் சொன்னவுடன் அவருக்கும் பிடித்தது. நடிகர் வைபவிடம் கூறிய உடன் அவருக்கும் பிடித்திருந்தது. இந்த கதையில் வைபவ் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்திருக்கிறார். அவர் இதுவரை கிரைம் திரில்லர் ஜேனரில் நடித்ததில்லை. அதனால் அவரது திரை தோன்றல் வித்தியாசமாகவும் இருக்கும். அது ரசிகர்களை கவரும். '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துடுப்பாட்ட வீரர் ராகுல் டிராவிட்டிற்கு 'டெஸ்ட்'...

2025-03-26 16:48:38
news-image

சூர்யாவுடன் மோதும் சசிகுமார்

2025-03-26 16:03:40
news-image

'ஃபைனல் டெஸ்டினேஷன் ப்ளட்லைன்ஸ்' திகில் திரைப்பட...

2025-03-26 15:08:17
news-image

சிறந்த அனுபவம் கிடைக்க 'எம்புரான்' படத்தை...

2025-03-26 10:21:42
news-image

நடிகை பாவனா நடிக்கும் ' தி...

2025-03-26 10:04:13
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-26 09:59:34
news-image

விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின்...

2025-03-26 09:55:07
news-image

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால்...

2025-03-25 20:46:51
news-image

'எம்புரான்' திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல்...

2025-03-25 19:03:07
news-image

பொங்கலுக்கு மோதிக்கொள்ளும் ஜனநாயகன் - பராசக்தி

2025-03-25 15:16:33
news-image

நாளை முதல் ஓடிடியில் வெளியாகிறது "முஃபாசா:...

2025-03-25 12:47:10
news-image

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல கராத்தே...

2025-03-25 11:17:30