மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை இலட்சக்கணக்கில் அதிகரிப்பதில் எந்தளவுக்கு நியாயம் - விமல் வீரவன்ச

20 Feb, 2024 | 05:18 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பொருளாதார பாதிப்புக்கு  மத்தியில் மூன்று வேளை உணவை கூட பெற்றுக் கொள்வதில் பெரும்பாலான மக்கள் போராடுகின்ற சூழ்நிலையில் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளின் சம்பளத்தை பல இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளமை  எந்தளவுக்கு நியாயமானது.

சுயாதீனம் என்றுக் குறிப்பிட்டுக் கொண்டு மத்திய வங்கி தன்னிச்சையான முறையில் செயற்படும் சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம்,நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச் ) சட்டமூலம் உள்ளிட்ட ஏழு சட்டமூலங்கள் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.இவ்விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு  சம்பளம் அதிகரிக்கப்பட்டதை தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது ' மத்திய வங்கியின் புதிய சட்டத்துக்கு அமைய சம்பளம் அதிகரிக்கப்பட்டதாகவும்,அது மத்திய வங்கியின் சுயாதீனம் ' என்றும்  அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு விரும்பிய வகையில் தீர்மானம் எடுக்க இடமளிக்க கூடாது என்பதற்காகவே ' புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தோம்.

நாட்டு மக்களில் பெரும்பாலானோர் மூன்று வேளை உணவை உட்கொள்வதில் போராடுகிறார்கள்.வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பால் திண்டாடுகிறார்கள்.

இவ்வாறான பின்னணியில் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பல இலட்ச கணக்கில் சம்பளத்தை அதிகரிப்பது எந்தளவுக்கு நியாயமானது.

கரண்டி தம் கையில் இருப்பதால் மத்திய வங்கி எண்ணம் போல் உணவை பரிமாறிக் கொள்கிறது.ஜனாதிபதியின் பொருளாதார மீட்சி எந்தளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சுயாதீனம் என்று குறிப்பிட்டுக் கொண்டு தன்னிச்சையாக செயற்படும் சூழலே மத்திய வங்கிக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் மைதானத்துக்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதலில்...

2024-06-16 11:52:25
news-image

கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த...

2024-06-16 11:21:58
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய...

2024-06-16 11:26:58
news-image

ரயிலில் பயணித்த உக்ரைன் யுவதி ரயில்...

2024-06-16 11:13:55
news-image

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது...

2024-06-16 10:14:14
news-image

ரணில் - சஜித் இணைப்பு முயற்சி...

2024-06-16 09:56:40
news-image

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை :...

2024-06-16 09:34:17
news-image

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்...

2024-06-16 07:26:46
news-image

இன்றைய வானிலை

2024-06-16 06:08:16
news-image

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும்...

2024-06-15 21:27:49
news-image

சாதகமான பதிலின்றேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்...

2024-06-15 21:22:14
news-image

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ...

2024-06-15 21:25:54