ஐந்து முதல் பதினைந்து வயது வரை உள்ள சிறார்களும், 40 வயது முதல் 60 வயதிற்குள் உள்ள பெரியவர்களும் டெர்மடோமயோசிடிஸ் எனும் அரிய வகையினதான தசை பலவீனம் மற்றும் தசை வீக்க பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இதற்கு உரிய தருணத்தில் முறையான சிகிச்சையை மேற்கொள்ளாவிடில் உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
டெர்மடோமயோசிடிஸ் எனும் தசை வீக்க பாதிப்பு ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. மரபணு மாற்ற குறைபாடு காரணமாகவும், சுற்றுசூழல் காரணிகளாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாகவும் குறிப்பாக வைரல் தொற்றுகள், புகை பிடித்தல், சூரிய ஒளி ஒவ்வாமை, குறிப்பிட்ட மருந்தியல் சிகிச்சைகளின் பக்க விளைவு.. ஆகியவற்றின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உணவுகளை விழுங்குவதில் சிரமம், தோல் தடிப்பு, தோல் அரிப்பு, தோலில் மாற்றங்கள், முகம், கண்ணிமைகள், முழங்கால்கள், முழங்கைகள், மார்பு, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் வலியுடன் கூடிய அரிப்பு, இடுப்பு, தொடை, தோள், கைகளின் மேல் பகுதி, கழுத்து போன்ற பகுதியில் உள்ள தசைகளில் பலவீனம் ஏற்பட்டு, உங்களது இடது மற்றும் வலது புறங்களை செயல்படுவதிலும், இயக்குவதிலும் பாதிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்... டெர்மடோமயோசிடிஸ் எனும் தசை பலவீன பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறீர்கள் என உணர்ந்து கொண்டு உடனடியாக மருத்துவர்கள் சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலமே தவறுதலாக ஆரோக்கியமான திசுக்களையும், தசைகளையும் பாதிப்பதால் இத்தகைய அரிய வகையினதான பாதிப்பு ஏற்படுகிறது. இதனை மருத்துவ மொழியில் ஒட்டோ இம்யூன் டிசிஸ் என குறிப்பிடுகிறார்கள்.
இத்தகைய நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே, எலக்ட்ரோமயோகிராபி, தோல் மற்றும் தசை திசு பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். இதனைத் தொடர்ந்து பிரத்யேக ஸ்டீராய்டு மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். அதனைத் தொடர்ந்து பிசிகல் தெரபி, ஸ்பீச் தெரபி போன்ற இயன்முறை சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் அளிப்பர். சிலருக்கு நரம்புகளின் ஊடாக ஊசி மூலம் இம்யூனோகுளோபலின் என்ற சற்று விலை உயர்ந்த சிகிச்சையை அளித்து நிவாரணம் வழங்குவர். வெகு சிலருக்கு மட்டுமே தோல் தடிப்பு ஏற்பட்ட பகுதிகளில், தோலின் அடிப்பகுதியில் படிந்திருக்கும் கால்சிய படிவுகளை அகற்றும் பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர்.
வைத்தியர் தீப்தி - தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM