இன்றைய சூழ்நிலையில் நிறைந்த சூழலில் வருவாய் ஈட்டுவது என்பது கடினமாகி வருகிறது. அதனால் மக்களும் புது புது வழிகளை தேடி கண்டறிந்து தங்களின் தன வரவை அதிகரித்துக் கொள்கிறார்கள். குறிப்பாக சேவை துறையில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களின் நாளாந்த வருவாய் என்பது குறைந்து கொண்டே வருகிறது. அதே தருணத்தில் உற்பத்தி பிரிவில் அதாவது மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் போட்டிகள் இல்லாத சூழல் உருவாகி, அதில் ஈடுபட்டிருப்பவர்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வருவாய் ஈட்டி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களது ஜோதிட நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி உரிய பரிகாரங்களை மேற்கொண்டு வெற்றிகளை சாத்தியப்படுத்திகிறார்கள். எனவே நீங்களும் அவர்கள் பின்பற்றும் எளிய பரிகாரங்களை கடைப்பிடித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என ஆன்மீக பெரியோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நீங்கள் நினைக்கும் காரியங்களில் வெற்றி பெற எந்த காரியத்தை தொடங்குகிறீர்களோ, தொடங்குவதற்கு முன் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று அல்லது அருகில் உள்ள ஆலயத்தில் இருக்கும் விநாயகரின் சன்னதிக்கு சென்று, இரண்டு நெய் தீபங்களை ஏற்றி, விநாயகப் பெருமானை 21 முறை வலம் வந்து வழிபட வேண்டும். இதனை தொடர்ச்சியாக 21 நாட்கள் மேற்கொண்டால்... நீங்கள் நினைத்த காரியம் நடைபெறுவதற்கான சூழல் உருவாகி, நீங்கள் வெற்றி அடைவதை அனுபவத்தில் உணரலாம். நினைத்த காரியம் வெற்றி பெற்றவுடன் மறவாமல் நன்றி செலுத்தும் வகையில் விநாயகப் பெருமானுக்கு 21 என்ற எண்ணிக்கையில் அல்லது 108 என்ற எண்ணிக்கையில்.. தேங்காய்களை வாங்கி, அதனை சிதறு தேங்காயாக உடைக்க வேண்டும் என்பதையும் மறவாதீர்கள்.
வேறு சிலர் குறிப்பாக தன வரவை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள்.. காலையில் எழுந்ததும் கிழக்கு முகமாக நின்று அல்லது உங்களுக்கு அதிர்ஷ்ட திசைகளின் பக்கம் நின்று கொள்ளுங்கள். உங்களது கைகளில் செம்பு பாத்திரத்தில் அருந்தும் நீரை குடித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த நீரில் உங்களது முகத்தை பார்த்து மகாலட்சுமி மந்திரம் ஏதேனும் ஒன்றை உச்சரித்து விட்டு, அந்த நீரை பருகிவிட வேண்டும். அந்த மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும். தொடர்ந்து இந்த செயலை 21 நாட்கள் வரை செய்தால்.. தடைபட்ட அல்லது வராது என்று நினைத்த பணம் வீடு தேடி வருவதை அனுபவத்தில் காணலாம். சிலருக்கு சிறிய அளவிலான முயற்சிகளிலேயே எதிர்பாராத அளவிற்கு தன வரவு கிட்டும்.
இந்த இரண்டு எளிய பரிகாரங்களை பலன்கள் கிடைத்தவுடன் இடைநிறுத்தம் செய்யாமல், தொடர்ந்து 21 நாட்கள் என்ற கணக்கில்... தொடர்ச்சியாக மேற்கொண்டால், பலன்கள் தடையின்றி கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM