பேருவளையில் சீன பெண்ணினால் தாக்கப்பட்ட இரு பொலிஸார்!

Published By: Digital Desk 3

20 Feb, 2024 | 04:12 PM
image

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு  குறித்து  விசாரணை நடத்தச்  சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் இன்று செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய சீனப் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை மங்கள வீதியிலுள்ள வீடு ஒன்றில்  சீனப் பெண்ணொருவர் செல்லுபடியாகும் வீசா இன்றி தங்கியிருப்பதாகக்  கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அங்கு சென்றுள்ளனர்.

இதன்போதே அங்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்தச் சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-17 06:11:47
news-image

விவசாயிகளைப் போன்று அரச உத்தியோகத்தர்களும் கைவிடப்படுவார்களா?...

2025-02-16 20:51:57
news-image

79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை...

2025-02-17 04:06:19
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் 16 அம்ச...

2025-02-17 03:54:13
news-image

யாழில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் மயக்கமடைந்த...

2025-02-17 03:47:47
news-image

யாழில் கல்சியத் தண்ணீரை குடித்த முதியவர்...

2025-02-17 03:44:42
news-image

முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள்...

2025-02-17 03:39:47
news-image

மின்சாரம் தாக்கி வேலணை செட்டிபுலம் சிறுவன்...

2025-02-17 03:31:52
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19