எமது மானிட உறவுகளுக்கு புதிய தரமான அர்த்தமொன்றைக் கொடுக்க, மனிதப் பண்புகளுக்கு முன்னுரிமை அளிக்கவே நாங்கள் அணிதிரள்கிறோம்.
பெண்களாகிய எமக்குள் பத்தினிமார்கள் மாத்திரமல்ல காளியம்மனும் இருக்கிறார்கள். எமது பொறுமை எல்லை கடந்துவிட்டால் காளியம்மனும் வெளியே வரக்கூடும். இந்த முறைமைக்குள் இனிமேலும் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பினை வைத்துக்கொள்ள முடியாது என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாந்தி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பெண்கள் மாநாடு கடந்த 17 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.
இங்கு கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாந்தி ஹரினி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாடு முழுவதிலுமுள்ள பெண்கள் விழிப்படைவதையும் ஒழுங்கமைவதையும் நாங்கள் காண்கிறோம். அது உன்னதமானது.
பல வாரங்களாக பல மாதங்களாக நாங்கள் வீடுவீடாகச் சென்று உங்கள் அனைவருடனும் உரையாடியதால் தோன்றிய மலர்ச்சியும் ஒழுங்கமைதலும் நாடுபூராவிலும் காணப்படுகின்றது.
"பெண்களாகிய நாங்கள் ஓரே மூச்சுடன்" எனும் தொனிப்பொருளின்கீழ் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி ஒருங்கிணைவதே அதிலுள்ள உன்னதமான நிலைமையாகும்.
இந்த நாட்டுக்கு அவசியமான மாற்றத்திற்கான தலைமைத்துவத்தை நீங்கள் அனைவரும் எடுத்துக்கொள்வதே இதன் மூலமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. மேடையில் இருக்கும்போது கிடைத்த ஒருசில செய்திகள் தொடர்பில் கவனத்தை ஈர்க்கச்செய்வித்து உரையாற்றலாமென்று நான் நினைக்கிறேன்.
இனங்காணப்படாத போதை மாத்திரைகளை பருகியதால் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றின் ஆண்டு ஐந்து மாணவர்கள் நால்வர் மயங்கிவிழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
எமது ஆசிரியர்கள் பற்றியும் அதிபர்கள் பற்றியும் பாடசாலைகள் பற்றியும் எம்மனைவருக்கும் பெருமைமிக்க நம்பிக்கை இருந்தது.
பிள்ளையின் பாதுகாப்பு தொடர்பில் நிலவிய நம்பிக்கை சிதைக்கப்பட்டு வருகின்றது. பாடசாலை மதில் சிதைந்து பிள்ளைகள் மடிகிறார்கள். பாடசாலைக்குள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு நிலவுகின்றது எனும் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாதுள்ளது.
வீட்டில் அமைதி இல்லாத அளவுக்கு குடும்பக் கட்டமைப்பு சீரழிந்துவிட்டது. உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி ஆகிய அனைத்தையுமே நாங்கள் இழந்துள்ளோம்.
வைத்தியசாலையில் முறைப்படி மருந்து கிடைத்து குணமடைவது ஒரு அதிசயமாக மாறியுள்ளது. இந்த சமூக பொருளாதார நிலைமைக்குள் எமது மனிதாபிமானமும் அன்பான கடப்பாடுகளும் பேரவலமாக மாறிவிட்டது.
இந்த சமூக பொருளாதார நிலைமைக்குள் பெண்கள் - ஆண்கள் ஆகிய நாங்கள் அனைவருமே இறுகிப் போயுள்ளோம்.
அன்றாட விலைச் சிட்டைகளை செலுத்தி, பிள்ளையைப் பாடசாலைக்கு அனுப்பி, ஏதோசில மருந்துகளை வாங்கி, மூச்செடுத்து உயிர்வாழவே காலை தொடக்கம் இரவு வரை போராடிக் கொண்டிருக்கிறோம். அதற்காக வீடுக்குள்ளே எவ்வளவுதான் யுத்தம் நடைபெறுகின்றது? குறைந்தபட்சம் நிம்மதியான உறக்கம்கூட கிடையாது.
தமது பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க, மருந்து கொடுக்க மிகவும் கடினமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவள் மீதுள்ள பெறுமதியும் , அபிமானமும் இல்லாமல் போகின்ற தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
தாய் தந்தையருக்கு நாட்டைக் கைவிட்டுத் தொழில்தேடி செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. பிள்ளைகளுடன் உரையாட எமக்கு நேரமில்லை. பிள்ளை சிறு தவறு புரிந்தாலும் பெற்றோர் ஆத்திரமடைகிறார்கள்.
பசிக்கு உண்ண, மருந்து வாங்க, ஓரளவுக்கு கல்வியை வழங்க மற்றும் பில்களைச் செலுத்த பெரும்போராட்டத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. அதற்கு அப்பால் ஒரு வாழ்க்கையைப் பற்றி எவ்விதத்திலும் சிந்திக்க முடியாது.
இந்த சமூக பொருளாதார முறைமை நாசமாக்கியுள்ளது எமது வாழ்க்கையை மாத்திரமல்ல, எமது மனிதாபிமானத்தையும் ஆகும்.
எமது ஈடுபாடுகள், உயிர்களுக்கு அர்த்தம் தருகின்ற உறவுகளின் தரம் ஒழிக்கப்பட்டு, பெற்றோர்கள் பிள்ளைகளை வெறுத்துவிட்டார்கள். பிள்ளைகள் பெற்றோர்களை வெறுத்துவிட்டார்கள். ஒருவரையொருவர் வெறுத்துவிட்டார்கள்.
மனிதாபிமான உறவுகளை இந்த அளவுக்கு நாசமாக்கிய ஒரு சமூகத்தை முன்னேற்றமானதெனக் கூறமுடியுமா? இந்த சமூகத்தில் பாதுகாத்துக்கொள்ள ஏதாவது எஞ்சியுள்ளதெனக் கூறமுடியுமா? நாங்கள் இருப்பது ஒரு பொருளாதாரச் சீரழிவில் மாத்திரமல்ல, ஒட்டுமொத்த பேரவலத்தையே எதிர்நோக்கியுள்ளோம்.
அதனை விளங்கிக்கொண்ட பெண்கள் பொறுத்தது போதும், இப்போது நீங்கள் மாறவேண்டுமென தீர்மானித்து விட்டீர்கள். இத்தகைய சமூகமொன்றை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது எனும் திடசங்கற்பம் எம்மனைவரிடமும் இருக்கின்றது.
இந்த நிலைமையை மாற்றியமைத்திடவே நாங்கள் அனைவரும் இணைந்திருகிறோம். மற்றுமொரு அரசாங்க மாற்றத்திற்கன்றி பாரதூரமான சமூக மாற்றமொன்று மூலமாக எமது மனிதாபிமானத்தை மீண்டும் கண்டுபிடிக்கவே அனைவரும் முன்வந்திருக்கிறோம்.
எமது மானிட உறவுகளுக்கு புதிய தரமான அர்த்தமொன்றைக் கொடுக்க, மனிதப் பண்புகளுக்கு முன்னுரிமை அளிக்கவே நாங்கள் அணிதிரள்கிறோம்.
பெண்களாகிய எமக்குள் பத்தினிமார்கள் மாத்திரமல்ல காளியம்மனும் இருக்கிறார்கள். எமது பொறுமை எல்லை கடந்துவிட்டால் காளியம்மனும் வெளியே வரக்கூடும். இந்த முறைமைக்குள் இனிமேலும் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பினை வைத்துக்கொள்ள முடியாது.
எமது பிள்ளைகளுக்காக கனவு காணவும் இந்த கனவினை நனவாக்கவும்கூடிய சமூகமொன்றை உருவாக்கவேண்டிய அவசியம் எமக்கு உண்டு.
அந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரலாற்றுரீதியான மாற்றத்திற்காக நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இருக்கிறோம்.
பெண்களிடம் பொதிந்துள்ள தலைமைத்துவம், திறமைகள், துணிச்சல் என்பவற்றை நாட்டுக்காக அர்ப்பணித்திடவே இந்த பெண்கள் ஒழுங்கமைந்து வருகிறார்கள்.
பெண்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கின்ற மேடையொன்று எமது சமூகத்திற்கு அவசியம். அவற்றுக்கு செவிசாய்க்கின்ற சமூகமொன்று, அரசியல் தலைமைத்துவம் எமக்கு அவசியமாகும்.
அதற்காக கட்டியெழுப்பப்பட்டுள்ள மேடைதான் திசைகாட்டி. எமது பெறுமதி, எமது மகிழ்ச்சிக்கு இடமுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டுமாயின் எமக்கு அதிகாரம் அவசியமாகின்றது. அடுத்த சனாதிபதியாகப் போகின்றவர் அநுர திசாநாயக்க என்பதை சமூகம் எற்றுக்கொண்டுள்ளது.
அதற்கு அப்பால் சுதந்திரமான சமூகமொன்றை, பெண்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நாடொன்றை உருவாக்கவேண்டிய பொறுப்பு எம்மனைவருக்கும் உண்டு. மகிழ்ச்சியால், அமைதியால், அன்பால் நிரம்பிவழிகின்ற சமூகமொன்றைக் கட்டியெழுப்ப நாமனைவரும் ஒன்றுசேர்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM