இளம் கிரிக்கெட் வீரர்களை நல்லுணர்வுடன் விளையாடுமாறு 'குட்டி சங்கா' ஷாருஜன் வேண்டுகோள்

20 Feb, 2024 | 12:01 PM
image

(நெவில் அன்தனி)

வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்கள் நல்லுணர்வுடனும் நேர்மைக் குணத்துடனும் விளையாடுவதைக் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும் எனவும் என்ன விலைகொடுத்தேனும் வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணத்தை கைவிடவேண்டும் எனவும் கொட்டாஞ்சேனை, ஆசீர்வாதப்பர் கிரிக்கெட் அணித் தலைவர் சண்முகநாதன் ஷாருஜன் வினயமாக வேண்டுகோள் விடுத்தார்.

விண்ணத்தில் நிச்சயிக்கப்பட்ட பென்ஸ் - வெஸ்லி கிரிக்கெட் சமரின் நான்காவது அத்தியாயம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகசந்திப்பு ஜெட்விங் கேட்போர்கூடத்தில் நடைபெற்றபோது உரை நிகழ்த்துகையில் ஷாருஜன் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டுக்கே உரிய பாணியில் உண்மையான உணர்வுடன் விளையாட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

'புனித ஆசீர்வாதப்பர் (சென். பெனடிக்ட்ஸ்) கல்லூரிக்கும் வெஸ்லி கல்லூரிக்கும் இடையிலான சகோதரத்துவ பிணைப்பை பெருமையுடன் வெளிப்படுத்தும் வகையில் எங்கள் இரண்டு பாடசாலைகளும் உணர்வுகளைப் பேணிவருவதுடன் ஐக்கியத்தைக் கட்டிக்காத்துவருகின்றன. எமது எண்ணமெல்லாம் வெற்றி  மற்றும் தோல்வி பற்றியதல்ல. ஆனால், விளையாட்டின்பால் எங்களது பகிரப்பட்ட ஆர்வமே ஆகும்' என ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

இதேவேளை, புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கும் வெஸ்லி கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டுக்கு மேற்பட்ட உறவுகளை பிரதிபலிக்கும் வகையில் விண்ணகத்தில் நிச்சிக்கப்பட்ட இந்த வருடாந்த கிரிக்கெட் போட்டி அமைவதாக வெஸ்லி கிரிக்கெட் அணித் தலைவர் சனிது அமரசிங்க தெரிவித்தார்.

'மற்றெல்லா பாடசாலை கிரிக்கெட் போட்டிகளிலும் பார்க்க எமது பாடசாலைகளின் கிரிக்கெட் ஒழுக்கத்தையும் கூட்டு உணர்வையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைகிறது. எமது கல்லூரி இந்த வருடம் 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதால் இப் போட்டி முக்கியத்தும் வாய்ந்ததாக அமைகிறது' என்றார் அவர்.

புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கும் வெஸ்லி கல்லூரிக்கும் இடையிலான வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் காட்மன் கிண்ணத்துக்கான 4ஆவது வருடாந்த 2 நாள் கிரிக்கெட் போட்டி பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் எதிர்வரும் 23ஆம், 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதேவேளை வெஸ்லி கல்லூரி 150 ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் மார்ச் மாதம் 3ஆம் திகதியன்று இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பி.சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இப் போட்டி அருட் சகோதரர் லூக் க்றகறி கேடயத்திற்காக நடத்தப்படும்.

இந்த வருடம் புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணியில் அணித் தலைவர் சண்முகநாதன் ஷாருஜன் நான்காவது வருடமாக இடம்பெறுவதுடன், கடந்த வருட அணித் தலைவர் மெவான் திசாநாயக்க, நேதன் பெர்னாண்டோ, உதவித் தலைவர் அர்ஷான் ஜோசப் ஆகிய மூவரும் 3 வருடங்களாக அணிக்காக விளையாடி வருகின்றனர்.

அவர்களைவிட யோஹான் எதிரிசிங்க, சமிது மதுரங்க பீரிஸ், ஓனேஸ் மிக்காயல், ஜனிந்து நந்தசேன, நிர்வன் ஜயதிலக்க, வித்தான ரத்நாயக்க, துமீன் லியனஆராச்சி, திதுல ஏஷான் எதிரிசூரிய, மரியோ பெர்னாண்டோ, தினத் செனில, தெஹான் பிட்டார், அக்கெய்ன் சென்ஹாஸ் பெரேரா, துமிந்த யெஹான், மெனிக்ய தேஷப்ரிய, அக்ஷார் செல்வநாயகம், த்ரிஷேன் சில்வா, புத்திம தருப்பதி, அயேஷ் கஜநாயக்க ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

வெஸ்லி கல்லூரி அணியில் இடம்பெறும் அணித் தலைவர் சனிது அமரசிங்க, ஷக்கேஷ் மினோன், லினால் சுபசிங்க, உவின் பெரேரா, ருக்ஷான் தரங்க, ரவிந்து சிகேரா ஆகிய அனைவரும் அனுபவம் வாய்ந்த வீரர்களாவர்.

அவர்ளுடன் அனுக பஹன்சர, ஜேதன் வைமன், நிலுபுல் லியனகே, கீத் கோரால, ஸ்ரீராம் ஜீவன், யூசுப் அக்ரம், ப்ரெண்டன் பெர்னாண்டோ, தினேத் சிகேரா, அஹ்மத் நஹ்யான், திமத் சுதர்ஷ்மன், செஹந்து அதாவுட, துல்ஷான் நெத்மின, தெவ்மித் தத்சிலு, எஹ்ரென் அலி, கவிந்து அமரசிங்க, மொஹமத் பாஹீஜ் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

(படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை...

2024-09-18 16:51:08
news-image

நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள்...

2024-09-18 12:34:13
news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-17 22:27:53
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41