தகாத உறவினால் ஏற்பட்ட மோதலில் ஐவர் படுகாயம்; கிளிநொச்சி இராமநாதபுரத்தில் மூவர் கைது!

20 Feb, 2024 | 11:17 AM
image

தகாத உறவு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில்  ஏற்பட்ட முரண்பாடு காரணமாக  மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும்  படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை  (19) இரவு  கிளிநொச்சி இராமநாதபுரம், கல்மடு பகுதியில் இடம்பெற்றுள்ளது . 

படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

28 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களும், 28, 30 மற்றும் 50 வயதுடைய மூன்று பெண்களுமே இவ்வாறு காயமடைந்துள்ள நிலையில், இவர்கள் பளை மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். 

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மற்றும் வட்டக்கச்சி பிரதேசத்தில் வசிக்கும்  மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

தகாத உறவினால் ஏற்பட்ட  முரண்பாடு  காரணமாக கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

2025-01-19 22:14:13
news-image

அரசாங்கம் மக்களின் வாழ்க்கை செலவை அதிகரித்ததே...

2025-01-19 22:09:10
news-image

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக அரசாங்கம் எவ்வாறு...

2025-01-19 19:54:42
news-image

நாடளாவிய ரீதியிலுள்ள நெல் களஞ்சியசாலைகளை தூய்மைப்படுத்தும்...

2025-01-19 20:06:47
news-image

சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த...

2025-01-19 20:55:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து...

2025-01-19 20:26:23
news-image

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி...

2025-01-19 19:58:46
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22
news-image

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

2025-01-19 18:41:32